செய்திகள் :

தமிழ் சினிமா 2024

post image

ஜனவரி

6: தமிழ் திரையுலகம் சார்பில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகினர் கலந்து கொண்டனர்.

மே

1: 80 -களின் தமிழ் சினிமாவில் பல மனதை மயக்கும் பாடல்களைப் பாடி தன் தனித்துவக் குரலால் ரசிகர்களைக் கவர்ந்த பாடகி உமா ரமணன் காலமானார்.

2: பிரபல நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் சினிமா பங்களிப்பை பெருமைப்படுத்தும் விதமாக 100 நிமிடங்கள் 100 பிரபுதேவா பாடல் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த குழந்தைகள் வெயில் தாக்கத்தில் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

4: இளையராஜா காப்புரிமை நோட்டீஸ் அளித்த விவகாரம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தார்.

16: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மத்திய அரசின் பத்மபூஷண் விருது வழங்கப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.

4: பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் மோகன் நடராஜன் காலமானார்.

பாலியல் குற்றங்களில் புகார் கூறப்படும் நபர்கள் மீது முதலில் எச்சரிக்கை விடப்படும். பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பன உள்ளிட்ட 7 தீர்மானங்கள் தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

16: நடிகர் சித்தார்த் - நடிகை அதிதி ராவ் திருமணம் நடைபெற்றது.

17: பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா பெங்களூரில் காலமானார்.

22: தான் முறைப்படி அனுமதி வாங்கியுள்ள 'வேள்பாரி' நாவலின் காட்சிகளை மற்ற படங்களில் இணைப்பது தொடர்பாக இயக்குநர் ஷங்கர் எச்சரிக்கை விடுத்தார்.

நவம்பர்

15: நயன்தாரா தனது ஆவணப்படமான 'நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரிடேல்' தயாரிப்பதைத் தடுத்ததாகக் குற்றம் சாட்டி நடிகர் தனுஷூக்கு எதிராக சர்ச்சை நோட்டீஸை விடுத்தார்.

16: நடிகர் தனுஷ் மீதான தனது விரக்தியை பகிரங்கமாக ஒரு நீண்ட திறந்த கடிதத்தில் வெளிப்படுத்தினார் நயன்தாரா.

19: ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் அவரின் மனைவி சாய்ரா பானு இருவரும் பிரிந்ததாக ஊடகங்களுக்கு அறிவித்தனர்.

20: 350 கோடி ரூபாய் பெரிய பட்ஜெட்டில் உருவான, சூர்யாவின் 'கங்குவா', வெளியான ஐந்து நாள்களில் உலகளவில் 85.5 கோடி ரூபாய் வசூல் செய்து, 100 கோடி ரூபாய் வசூலை எட்டியது.

20: 350 கோடி பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட கமலின் 'இந்தியன் 2' உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.150 கோடி மட்டுமே வசூலித்தது.

27: நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர்.

டிசம்பர்

4: ஹைதராபாதில் 'புஷ்பா 2' திரைப்படத்தின் பிரீமியர் காட்சியின் போது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்தார்

6: தேசிய விருது பெற்ற ' குடிசை' இயக்குநர் ஜெயபாரதி காலமானார்.

'புஷ்பா 2' பீரிமியர் காட்சியின் போது நெரிசலில் பெண் உயிரிழப்பு சம்பவத்தால் காலை காட்சிகளுக்கு தடை விதித்தது தெலங்கானா அரசு.

10: விஜய்சேதுபதியின் 'மகாராஜா' திரைப்படம் சீன திரையரங்குகளில் வெளியாகி வசூல் சாதனை புரிந்தது.

11: அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளில் உச்சமாக ரூ. 1000 கோடியைத் தொட்டது. இது இந்தியத் திரைப்படங்களில் இதுவரை இல்லாத வேகமானதாகும். அதாவது ஒரே வார சாதனை.

12: தமிழ், தெலுங்கு, மலையாளம், தொடர்ந்து தற்போது ஹிந்தியிலும் கால் பதித்து முன்னணி நடிகையாக திகழும் நடிகை கீர்த்தி சுரேஷ் அந்தோனி தட்டில் என்பவரை மணந்தார்.

20: திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் ராஜ் கபூரின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. மும்பையின் அந்தேரி மேற்கு பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். பிரதமரை கபூர் குடும்பத்தினர் சந்தித்தனர்.

வணங்கான் மேக்கிங் விடியோ!

இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள வணங்கான் படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் முதலில் சூர்யா நடித்து பின்னர் விலகினார். அதற்கடுத்து நாயகனாக அருண் விஜய் நடித்தார். இந்தப் ப... மேலும் பார்க்க

காதலிக்க நேரமில்லை: ரிலீஸ் தேதி!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெய... மேலும் பார்க்க

விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சி: புதிய தேதி அறிவிப்பு!

சமீபத்தில் ஒத்திவைக்கப்பட்ட விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சியின் புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சிடிச.28ஆம் தேதிஏஎம் ஜெயின் கல்லூரி மைதானத்தில் நடைபெறவ... மேலும் பார்க்க

தணிக்கைக் குழுவின் பாராட்டில் ‘காதல் என்பது பொதுவுடைமை’!

காதல் என்பது பொதுவுடைமை படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விவரம் வெளியாகியுள்ளது.இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்இயக்கத்தில் உருவான திரைப்படம் காதல் என்பது பொதுவுடமை. நவீன காதல் கதையைப் பேசும் படமாக உருவ... மேலும் பார்க்க

நமோ நமச்சிவாய..! சாய் பல்லவியின் தண்டேல் பட பாடல் அப்டேட்!

நடிகை சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள தண்டேல் படத்தின் 2ஆவது பாடல் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகை சாய்பல்லவி 2 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கு படத்தில் நாக சைதன்யாவுடன் நடிக்கிறார... மேலும் பார்க்க

பரோஸ் தோல்வி... மோகன்லால் சொன்ன பதில்!

பரோஸ் திரைப்படம் வணிக ரீதியாக தோல்வியைச் சந்தித்தற்காக நடிகர் மோகன்லால் கருத்து தெரிவித்துள்ளார்.நடிகர் மோகன்லால் இயக்கத்தின் முதல் படமான பரோஸ் கடந்த புதன்கிழமை கிறிஸ்துமஸ் வெளியீடாகத் திரைக்கு வந்தது... மேலும் பார்க்க