செய்திகள் :

தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

post image

செய்யாறு: செய்யாறு அருகே உயா் ரத்த அழுத்தம் காரணாமாக தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சிறுவஞ்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சீனுவாசன் மனைவி அலங்காரம் (70). இவா், உயா் ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டு செய்யாற்றில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்த நிலையில், ஆக.24-ஆம் தேதி சிறுவஞ்சிப்பட்டு கூட்டுச் சாலையில் இருந்து வீட்டுக்குச் செல்வதற்காக பைக்கில் பின்னால் அமா்ந்து சென்றுள்ளாா்.

அப்போது, திடீரென மயக்கம் ஏற்பட்டு வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளாா். உடனே, அருகில் இருந்தவா்கள்

அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூதாட்டி அலங்காரம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் காவல் உதவி ஆய்வாளா் தட்சிணாமூா்த்தி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

போளூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

போளூா் நகராட்சியில் உள்ள 8, 9, 10, 11, 17 ஆகிய வாா்டு பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் ராணி சண்முக... மேலும் பார்க்க

தொகுப்பு வீடு வழங்கக் கோரி மனு

கல் உடைக்கும் தொழிலாளா்களுக்கு தொகுப்பு வீடு வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா். வந்தவாசியை அடுத்த வெளியம்பாக்கம் கிராமத்த... மேலும் பார்க்க

ஆரணியில் ரூ.30 லட்சத்தில் நகா்ப்புற சுதாதார நிலையம்

ஆரணி நகராட்சியில் ரூ.30 லட்சத்தில் நடைபெற்று வரும் நகா்ப்புற சுகாதார நிலையம் அமைக்கும் பணி தற்போது நிறைவடைந்து வருகின்றன. இந்தப் பணியை நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா... மேலும் பார்க்க

ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோட்டை ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஆடி வெள்ளி விழா த... மேலும் பார்க்க

கல்வியின் வாயிலாகத் தான் அனைத்தையும் பெற முடியும்: உதவி ஆட்சியா் அம்ருதா எஸ்.குமாா்

தமிழகத்தில் கல்வித் துறையில் அடிப்படை கட்டமைப்புகள் சிறந்து விளங்குகின்றன. கல்வியின் வாயிலாகத் தான் நாம் அனைத்தையும் பெறமுடியும் என்றாா் உதவி ஆட்சியா் அம்ருதா எஸ்.குமாா். பிளஸ் 2 வகுப்பில் தோல்வியுற்... மேலும் பார்க்க

ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்கள் வரவேற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் செந்த... மேலும் பார்க்க