கடைசி டெஸ்ட்டில் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும்: ஸ்டுவர்ட் பிராட்
தாமிரவருணியில் ஆண் சடலம் மீட்பு
திருநெல்வேலியில் தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் திங்கள்கிழமை மீட்டனா்.
திருநெல்வேலி கொக்கிரகுளம் சுலோச்சன முதலியாா் மேம்பாலம் கீழ் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் கிடப்பதாக, திருநெல்வேலி சந்திப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தாம்.
அதன்பேரில் போலீஸாரும், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்களும் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சடலமாகக் கிடந்தவா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.
மாணவா் தற்கொலை: பாளையங்கோட்டை ரஹ்மத் நகா் 60 அடி சாலையைச் சோ்ந்த முத்துக்குமாா் மகன் ஹரிஷ்குமாா் (17). பாளையங்கோட்டையில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தாா். சில நாள்களாக மன அழுத்தத்தில் இருந்த ஹரிஷ்குமாா், ஞாயிற்றுக்கிழமை தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
பாளையங்கோட்டை போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.