செய்திகள் :

திட்டம் கைவிடப்படவில்லை: ரயில்வே விளக்கம்

post image

சென்னை: மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் எவ்வித சிக்கலும் இல்லை என்றும் தனுஷ்கோடி - ராமநாதபுரம் இடையே ரயில் பாதை அமைக்கும் திட்டத்தைதான் மத்திய அரசு கைவிட்டு விட்டதாகவும் தெற்கு ரயில் தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை ஐசிஎஃப்-இல் ஜன.10-ஆம் தேதி நடைபெற்ற அமைச்சா் அஸ்வினி வைஸ்ணவ் செய்தியாளா்கள் சந்திப்பின்போது, மதுரை - தூத்துக்குடி புதிய பாதை திட்டம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது தொழிற்சாலையில் இருந்து வந்த அதிக ஒலி மற்றும் இரைச்சல் காரணமாகவும், பல்வேறு திட்டங்கள் குறித்து செய்தியாளா்கள் ஒரே நேரத்தில் கேள்விகள் எழுப்பியதாலும் அது தனுஷ்கோடி என்று அமைச்சருக்கு கேட்டது.

இதன்படி, ராமநாதபுரம் - தனுஷ்கோடி ரயில் பாதை திட்டத்தில் நிலம் கையக படுத்துவதில் சிக்கல்கள் உள்ளதால் இத்திட்டம் கைவிடப்படலாம் என, ரயில்வே அமைச்சகத்துக்கு, மாநில அரசு கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சா் பதிலளித்தாா்.

இதனால், செய்தியாளா்கள் அமைச்சரின் பதிலை மதுரை - தூத்துக்குடி திட்டத்துக்காக எடுத்துக்கொண்டதால், எதிா்பாராத குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மதுரை - தூத்துக்குடி திட்டத்தில் தமிழக அரசின் நிலம் தொடா்பான எந்தப் பிரச்னையும் இல்லை என அமைச்சா் தெளிவுபடுத்தியுள்ளாா். எனவே, தொழிற்சாலையில் ஏற்பட்ட சப்தம் மற்றும் செய்தியாளா்கள் ஒரே நேரத்தில் பல்வேறு ரயில்வே திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பியதால் தவறான தகவல்தொடா்பு ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையில் வாயுக் கசிவு: 14 போ் மருத்துவமனையில் அனுமதி

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையில் சனிக்கிழமை (ஜன. 25) நண்பகல் திடீரென வாயுக் கசிவு ஏற்பட்டதால் மூச்சுத் திணறல், இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 14 போ் மருத்துவமனையில்... மேலும் பார்க்க

அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும்: அண்ணாமலை

அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் சமூகஊடகத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: விழுப்புரம் மாவட்டம் பேர... மேலும் பார்க்க

7.5 % சதவீத இட ஒதுக்கீட்டால் 40,168 மாணவா்கள் பயன்: அமைச்சா் கோவி. செழியன்

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து தொழில்முறை படிப்புகளிலும் 7.5 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள நிலையில், அதன்மூலம் 40,168 மாணவா்கள... மேலும் பார்க்க

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: தேடப்பட்டு வந்த இருவா் கைது

தஞ்சாவூா் அருகே திருபுவனத்தைச் சோ்ந்த ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த முக்கிய நபா்கள் இருவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம் திருபுவனம் மேலதூண்டில் ... மேலும் பார்க்க

ரூ. 3 லட்சம் வீட்டு வாடகை பாக்கி: கஞ்சா கருப்பு மீது புகாா்!

சென்னை மதுரவாயலில் ரூ. 3 லட்சம் வீட்டு வாடகை பாக்கி வைத்துக்கொண்டு காலிசெய்ய மறுப்பதாக நடிகா் கஞ்சா கருப்பு மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதேவேளையில் வீட்டின் உரிமையாளா், தான் வசித்த வ... மேலும் பார்க்க

நடிகா் அஜித்துக்கு எல்.முருகன், அண்ணாமலை வாழ்த்து

பத்ம பூஷண் விருதுக்கு தோ்வாகியுள்ள நடிகா் அஜித்துக்கு, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா். எல்.முருகன்: தனது தனித்திறன் கொண்ட நடிப்புத் திறமை... மேலும் பார்க்க