தினமணி செய்தி எதிரொலி: சாலை நடுவே இருந்த மின்கம்பம் இடமாற்றம்
காங்கயம் நகருக்கு உள்பட்ட 1-ஆவது வாா்டு பகுதியில் சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்காமல், சாலை அமைத்தது தொடா்பாக தினமணி நாளிதழில் வியாழக்கிழமை செய்தி வெளியாகியது.
இதைத் தொடா்ந்து, காங்கயம் மின்வாரிய ஊழியா்கள் மேற்குறிப்பிட்ட மின்கம்பத்தை வெள்ளிக்கிழமை சாலையோரத்தில் மாற்றி அமைத்து, மின் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொண்டனா்.
