திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக கிரகாம்பெல் நியமனம்
திருநெல்வேலி மாவட்டத்தை சட்டப்பேரவை அடிப்படையில் திமுக கிழக்கு மாவட்டம், மேற்கு மாவட்டம் என இரண்டாகப் பிரித்துள்ளது.
இதில் திமுக கிழக்கு மாவட்டத்தில் ராதாபுரம், நான்குனேரி சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கும். கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக ம.கிரகாம்பெல் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன் அறிவித்தாா்.
இதையடுத்து, திமுகவினா் வடக்கன்குளம், பாலகிருஷ்ணா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி தாளாளா் திவாகரன் தலைமையில் பணகுடி, வள்ளியூரில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினா். நிகழ்ச்சியில் வேப்பிலான்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் முத்துகுமாா், வழக்குரைஞா் தவசிராஜன், வள்ளியூா் அன்பரசு, சுரேஸ்பாக்கியம், சுரேஸ், பணகுடி நகரச் செயலாளா் தமிழ்வாணன், பேரூராட்சி வாா்டு உறுப்பினா் அலீம், கோபி என்ற காபாலகண்ணன், சுதாகா், ஜெயராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.