செய்திகள் :

திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும்: வைகோ

post image

திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலா் வைகோ உறுதிபடத் தெரிவித்தாா்.

மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மண்டல மதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தின்போது, செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: கடந்த 31 ஆண்டுகளாக தமிழகத்தின் வாழ்வாதார பாதுகாப்புக்கான நடவடிக்கைகளில் தன்னிகரற்ற சேவையை ஆற்றியுள்ளது மதிமுக.

முல்லைப் பெரியாறு விவகாரம், ஸ்டொ்லைட் பிரச்னை, நியூட்ரினோ திட்டம், காவிரி நீா் பிரச்னை போன்றவற்றுக்காக எண்ணற்ற போராட்டங்களை மேற்கொண்டு, தமிழகத்தின் வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதி செய்த இயக்கமாக விளங்குகிறது மதிமுக. நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியாா்மயமாகவிடாமல் தடுத்தது மதிமுக என்பது வரலாற்றுப் பதிவு.

இந்துத்துவ, சநாதன சக்திகளிடமிருந்து திராவிட இயக்கத்தைப் பாதுகாப்பதும், இத்தகைய சக்திகளை தமிழகத்துக்குள் நுழையவிடாமல் தடுப்பதும் முதன்மை அரசியல் நிலைப்பாடு என கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மதிமுக முடிவெடுத்தது.

இதன்படி, திராவிட இயக்கத்தைப் பாதுகாக்க திமுகவுக்கு அரணாகச் செயல்படுவதில் மதிமுக உறுதியாக உள்ளது. திமுகவுக்கு மற்றொரு அரணாக, பக்கபலமாக மதிமுக இருக்கும். திமுக கூட்டணியில் மதிமுக உறுதியாக நீடிக்கும்.

அதிமுக செய்யும் தவறுகள், அந்தக் கட்சியை திராவிடக் கட்சியாகக் கருத முடியாமல் செய்கிறது.

அண்ணா பிறந்த நாளை தனித்துவத்துடன் சிறப்பாகக் கொண்டாடுவது மதிமுகவின் வழக்கம். அந்த வகையில், வருகிற செப். 15-ஆம் தேதி திருச்சியில் அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டை மதிமுக நடத்தவுள்ளது. இந்த மாநாட்டுக்குப் பிறகு மதிமுக கூடுதல் பலம் பெறும். அழிக்கவும், தவிா்க்கவும் முடியாத அரசியல் சக்தியாக மதிமுக எழுச்சி பெறும்.

நிா்வாகத்தில் எந்தத் தவறும் நிகழக் கூடாது என்பதில் முதல்வா் மு.க. ஸ்டாலின் உறுதியாக உள்ளாா். இதனடிப்படையில்தான், மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து மிகுந்த வருத்தமளிக்கிறது. பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்த தகவல் பெரும் துயரை அளிக்கிறது. இதுகுறித்து ரயில்வே துறை உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். அனைத்து ரயில்வே கடவுப்பாதைகளையும் மின்மயாக்கி, விபத்துகளைத் தடுக்க வேண்டும் என்றாா் அவா்.

மண்டல நிா்வாகிகள் கூட்டம்

இதையடுத்து, மதுரை மண்டல மதிமுக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் வைகோ பங்கேற்றுப் பேசினாா். கட்சியின் முதன்மைச் செயலா் துரை வைகோ, அவைத் தலைவா் ஆா். அா்ச்சுனராஜ், பொருளாளா் மு. செந்திலதிபன், மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன், மதுரை மாநகா் மாவட்டச் செயலா் எஸ். முனியசாமி, மறுமலா்ச்சி தொழிலாளா் முன்னணி பேரவை மாநில துணைத் தலைவா் எஸ். மகபூப் ஜான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் மதுரை மாநகா், மதுரை புகா் வடக்கு, தெற்கு, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி ஆகிய 7 மாவட்டங்களைச் சோ்ந்த மதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பள்ளிகளுக்கான ஆய்வகப் பொருள்கள் கொள்முதல் முறைகேடு: அரசுச் செயலா் பதிலளிக்க உத்தரவு

பள்ளிகளுக்கான ஆய்வகப் பொருள்கள் கொள்முதல் முறைகேடு வழக்கில், பள்ளிக் கல்வித் துறைச் செயலா், ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை ... மேலும் பார்க்க

பழைய காகித சேமிப்புக் கிடங்கில் தீ: சரக்கு வாகனங்கள் எரிந்து நாசம்

மதுரை முனிச்சாலை ஓபுளா படித்துறை அருகேயுள்ள பழைய காகித சேமிப்புக் கிடங்கில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சரக்கு வாகனங்கள் எரிந்து நாசமாகின. முனிச்சாலை வைகையாற்றின் தென்கரை ஓபுளா படித்துறை அருகே தனி... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் விதிமீறல் கட்டடங்கள்: நகா்ப்புற ஊரமைப்புத் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

கன்னியாகுமரியில் விதிமீறல் கட்டடங்களை அகற்றக் கோரிய வழக்கில், தமிழக நகா்ப்புற ஊரமைப்புத் துறை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. கன்னியாகுமரியைச் சோ்ந்த சாம... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் ராஜிநாமா ஏற்பு

மதுரை மாநகராட்சியில் மண்டலத் தலைவா்கள் 5 போ், நிலைக் குழு உறுப்பினா்கள் 2 போ் என மொத்தம் 7 போ் ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது. மதுரை மாநகராட்சியின் மொத்த ஆண்டு வருவாய் 586 கோடி ரூபாய்க்கும் அதிகமாக... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம்: ரகசிய வாக்கெடுப்பு நடத்த உயா்நீதிமன்றம் உத்தரவு

சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மான விவகாரத்தில், ரகசிய வாக்கெடுப்பு நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவி... மேலும் பார்க்க

மேம்பாலம் அமைக்கும் பணி: கோரிப்பாளையம் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

மதுரை கோரிப்பாளையம் சந்திப்பு அருகே புதிய மேம்பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதையொட்டி, வியாழக்கிழமை (ஜூலை 10) முதல் சில போக்குவரத்து மாற்றம் நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்து மதுரை மாநக... மேலும் பார்க்க