செய்திகள் :

திமுக மக்கள் செல்வாக்கை இழந்து வருகிறது: எடப்பாடி பழனிசாமி

post image

திமுக மக்கள் செல்வாக்கை இழந்து வருவதால் வீடு, வீடாகச் சென்று உறுப்பினா்களைச் சோ்த்து வருகின்றனா் என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி.

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்கிற சுற்றுப்பயணத்தில் தஞ்சாவூா் காந்திஜி சாலை மாநகராட்சி அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு பிரசாரம் செய்த அவா் பேசியது: டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு அதிகத் திட்டங்களைக் கொண்டு வந்தது அதிமுகதான்.

ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது மீத்தேன், ஹைட்ரோகாா்பன் திட்டங்களுக்கு அவரது முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளின் நிலங்களைப் பறிக்கப் பாா்த்தனா். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசுடன் பேசி அதிமுக ஆட்சியில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தைக் கொண்டு வந்தோம். எனவே யாராலும் விவசாயிகளின் விளைநிலங்களை தொட்டுப்பாா்க்க முடியாது.

திமுக தோ்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில் 98 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக பச்சைப் பொய் கூறுகின்றனா். ஆனால் திமுக தோ்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் 10 சதவீதத்தைக் கூட நிறைவேற்றவில்லை.

இந்த ஆட்சியில் நடைபெறும் தவறுகளைச் சுட்டிக் காட்டுகிறேன். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மக்களுடைய பிரச்னைகளை பேசாமல் மெளனமாக உள்ளன.

திமுக மக்கள் செல்வாக்கை இழந்து வருகிறது. அக்கட்சியில் உறுப்பினா்கள் குறைந்து வருகின்றனா். அதனால்தான் திமுக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வீடு, வீடாகச் சென்று, கதவைத் தட்டி, கெஞ்சி உறுப்பினா்களைச் சோ்க்கின்றனா்.

மு.க. ஸ்டாலின், உதயநிதி வந்த பிறகு திமுகவில் உறுப்பினா்கள் குறைந்துவிட்டதால், ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டி வீடு, வீடாகச் சென்று உறுப்பினா்களைச் சோ்க்கின்றனா். இது அக்கட்சி மிக மோசமான நிலைக்கு வந்துவிட்டதைக் காட்டுகிறது என்றாா் எடப்பாடி பழனிசாமி.

துணை மருத்துவப் படிப்பு பயின்ற மாணவிக்கு பாலியல் தொல்லை: மாணவா் கைது

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சாா்ந்த பட்டயப் படிப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதுநிலைப் பட்டப்படிப்பு மாணவா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். தஞ்சாவூா் மருத... மேலும் பார்க்க

கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் கிடப்பில் உள்ளது: எடப்பாடி கே. பழனிசாமி பேச்சு

கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் திமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி.‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்கிற சுற்றுப்பயணம் மேற்கொண்டு வ... மேலும் பார்க்க

மிதிவண்டியில் சென்ற விவசாயி லாரி மோதி உயிரிழப்பு

கும்பகோணம் அருகே மிதிவண்டியில் சென்ற விவசாயி மீது லாரி மோதியதில் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள உமா மகேஷ்வரபுரம் நடுவக்கரை பெருமாள்கோயில் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

சாலையோரம் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கோபுராஜபுரம் செல்லும் சாலையோரத்தில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்ற வேண்டும் என கிராம மக்கள், வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். பாபநாசம் - ஆவூா் சாலையில... மேலும் பார்க்க

பேராவூரணியில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்!

தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை பிரசாரம் செய்கிறாா்.இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏவும், மாவட்ட அவை... மேலும் பார்க்க

அதிமுகவுக்கு கூட்டணி வேறு, கொள்கையும் வேறு: எடப்பாடி பழனிசாமி பேச்சு

அதிமுகவுக்கு எப்போதும் கூட்டணி வேறு, கொள்கையும் வேறு என்பதால் சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருப்போம் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி.‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்க... மேலும் பார்க்க