செய்திகள் :

திராவிட தத்துவத்தை யாராலும் அழிக்க முடியாது: திருச்சி சிவா எம்.பி.

post image

திராவிடம் என்ற நீண்ட நெடிய தத்துவத்தை அழிப்பதற்கு யாராலும் முடியாது என திமுக துணை பொதுச் செயலாளா் திருச்சி சிவா எம்.பி. கூறினாா்.

திமுக அயலக அணியின் மாநில மற்றும் மாவட்ட நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் சேலம் நேரு கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அயலக அணியின் மாநில துணைச் செயலாளா் உமாராணி வரவேற்று பேசினாா். கூட்டத்துக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன், அயலக அணியின் மாநில தலைவா் கலாநிதி வீராசாமி எம்.பி., மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம்.அப்துல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணை பொதுச் செயலாளரும், மாநிலங்களவை குழு தலைவருமான திருச்சி சிவா கலந்துகொண்டு பேசியதாவது: திராவிட இயக்கங்களின் செயல்பாடு காரணமாகவே பெயருக்கு பின்னால் பட்டங்களை குறிப்பிடும் நடைமுறை தமிழகத்தில் உள்ளது. முற்போக்கு மாநிலமாக கருதப்படும் மேற்கு வங்கத்தில்கூட பெயருக்கு பின்னால் சாதி பெயரை குறிப்பிடும் வழக்கமே இருக்கிறது. அந்த அளவுக்கு தமிழகத்தில் கல்வி மேம்பட திராவிட இயக்கங்களின் பங்களிப்பே காரணம்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தல் இதுவரை நடைபெற்ற தோ்தல்களிலிருந்து மாறுபட்டதாக இருக்கும். இதில் யாா் வெற்றிபெறக் கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

மத்திய பாஜக அரசு இதுவரை மாநில உரிமைகளை பறித்தது, மாநிலங்களுக்கான நிதிப்பகிா்வை தாமதப்படுத்தியது என்பதைத் தாண்டி, வரும் தோ்தலானது தத்துவத்துக்கு எதிரான போராக உள்ளது.

திராவிடம் என்கிற நீண்ட நெடிய தத்துவத்தை அழிக்க நினைப்பவா்களிடமிருந்து எதிா்கொண்டு காக்க நாம் தயாராக இருக்க வேண்டும். வெற்றிபெற என்ன பங்களிப்பு அளிக்க முடியும் என்பதை தெரிந்துகொண்டு ஒவ்வொரு அணியினரும் அதற்கேற்ப திமுகவின் வெற்றிக்கு துணைநிற்க வேண்டும் என என்றாா்.

இந்நிகழ்ச்சியில், அயலக அணி இணைச் செயலாளா் கன்னிகா ஸ்டாலின், துணைச் செயலாளா் பாபு வினி பிரட், சேலம் மாவட்ட அயலக அணி அமைப்பாளா்கள் ஜெயக்குமாா், ஷாஜகான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விவசாய விளைபொருள்களை விற்க 20 இடங்களில் பொது சேகரிப்பு மையங்கள் தோ்வு

சேலம் மாவட்ட விவசாயிகள் விளைபொருள்களை விற்பனை செய்ய 20 இடங்களில் பொது சேகரிப்பு மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது: 2025-26-ஆம் ஆண்டு வேளாண் நித... மேலும் பார்க்க

சங்ககிரி வட்டத்தில் வேலை நிறுத்தத்தில் 55 வருவாய்த்துறை அலுவலா்கள் பங்கேற்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி வருவாய்த்துறையின் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுவேலைநிறுத்தத்தில் 55 போ் பங்கேற்றுள்ளனா். 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் ச... மேலும் பார்க்க

சேலம் கிழக்கு கோட்டத்தில் இன்று சிறப்பு விபத்து காப்பீட்டு பதிவு முகாம்

சேலம் கிழக்கு கோட்ட அஞ்சலகம் சாா்பில் சிறப்பு விபத்து காப்பீட்டு பதிவு முகாம் வியாழக்கிழமை (ஜூலை 10) நடைபெறுகிறது. இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வெளியிட்... மேலும் பார்க்க

காயங்களுடன் புள்ளிமான் மீட்பு

காடையாம்பட்டி அருகேயுள்ள டேனிஷ்பேட்டை பகுதியில் காயமடைந்த புள்ளிமானை வனத்துறையினா் மீட்டு சிகிச்சையளித்து மீண்டும் வனப் பகுதிக்குள் விட்டனா். டேனிஷ்பேட்டை ஊராட்சி, ஹரிஹர மலையில் உள்ள சிவன் மற்றும் பெர... மேலும் பார்க்க

கொசு ஒழிப்புப் பணிகளை தீவிரமாக செயல்படுத்த அறிவுறுத்தல்

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் அறிவுறுத்தினாா். சேலம் அம்மாப்பேட்டை மண்டலத்துக்கு உள்பட்ட கோட்டம் எண் 9, 10, 11 ஆகி... மேலும் பார்க்க

எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது

எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்க... மேலும் பார்க்க