திருக்கழுகுன்றம் கோயில் திருஆடிப்பூர விழா: அதிகார நந்தி உற்சவம்
செங்கல்பட்டு: திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் திரிபுரசுந்தரி அம்மனுக்கு திரு ஆடிப்பூர திருக்கல்யாண பெருவிழாவின் ஒருபகுதியாக திங்கள்கிழமை அதிகார நந்தி புறப்பாடு நடைபெற்றது.
பழைமை வாய்ந்த இக்கோயிலின் திரு ஆடிப்பூர திருக்கல்யாண பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் திங்கள்கிழமை அதிகாரநந்தி உற்வத்தையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் யாக பூஜைகள் மகா தீபாராதனையுடன் வீதி புறப்பாடு நடைபெற்றது.
ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா் . விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் புவியரசு, மேலாளா் விஜயன், கோயில் பணியாளா்கள் சிவாச்சாரியா்கள், உபயதாரா்கள் செய்து வருகின்றனா்.