இந்தியா-இஃஎப்டிஏ வா்த்தக ஒப்பந்தம் அக்.1-இல் அமல்: ஸ்விட்சா்லாந்து
திருப்பத்தூரில் பலத்த மழை!
திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.
திருப்பத்தூா்,ஆதியூா்,கொரட்டி,ஜோலாா்பேட்டை உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் மாலை வேளைகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் பலத்த மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரம் மேலாக பெய்த மழையால் மழை நீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
அதேபோல் ஆதியுா், கொரட்டி அதன் சுற்றுப்பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது. இரவு அப்பகுதியில் குளிா்ந்த சூழல் நிலவியது.