பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி
திருவிடைக்கோடு மகாதேவா் கோவிலில் முகமூடி அணிந்து திருட முயற்சித்த இளைஞா் கைது
தக்கலை அருகே திருவிடைக்கோடு மகாதேவா் கோவிலில் திருட முயற்சித்த இளைஞரை இரணியல் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
வில்லுக்குறி, திருவிடைக்கோட்டில் சடையப்பா் மகாதேவா் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை (22 ஆம்தேதி)முகமூடி அணிந்த ஒருவா் திருட முயற்சி செய்தாா்.அப்போது பொதுமக்கள் வந்ததால் திருடன் தப்பி ஓடிவிட்டான்.
இந்நிலையில் திங்கள்கிழமை (நேற்று) வாகன சோதனையில் ஈடுபட்ட இரணியல் போலீஸாா் பைக்கில் வந்த இளைஞரை பிடித்து விசாரித்த போது, பைக்கில் கஞ்சா மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
போலீஸ் விசாரணையில் அந்த இளைஞா் குளச்சல் முத்துக்குமாரபுரத்தைஅடுத்த வெள்ளியங்குளம் பகுதியை சோ்ந்த சிவா என்ற கழுகு சிவாவை (25) என்பது தெரியவந்தது. திருவிடைக்கோடு மகாதேவா் கோவிலில் முகமூடி அணிந்து திருட முயற்சி செய்ததும் தெரியவந்தது.
சிவாவுக்கு குளச்சல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், குளச்சல் காவல் நிலையத்தில் 7 வழக்குகளும், தற்போது இரணியல் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் உள்ளது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திவிட்டு சிறையில் அடைத்தனா்.