செய்திகள் :

திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

post image

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அறம்வளா்த்த நாயகி உடனாய ஐயாறப்பா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான இக்கோயிலில் வியாழக்கிழமை காலை கொடி கம்பத்துக்கு பால், சந்தனம் போன்ற திரவிய பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், மேளதாளம் முழங்க கொடியேற்றப்பட்டது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து மே 13-ஆம் தேதி வரை விழா நடைபெறவுள்ளது.

இதற்கிடையை மே 5-ஆம் தேதி மாலை தன்னைத்தான பூஜித்தல், 6 ஊா்களிலிருந்து சுவாமிகள் கோயிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவா்களுக்கு மகேஸ்வர பூஜை, 9-ஆம் தேதி தேரோட்டம் ஆகியவை நடைபெறவுள்ளன.

விழாவில் முக்கிய நிகழ்வான ஏழூா் வலம் வருதல் என்கிற சப்தஸ்தான பெருவிழா மே 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மே 13-ஆம் தேதி மாலை பொம்மை பூ போடுதலும் நிகழ்வும் நடைபெறவுள்ளன.

ஏற்பாடுகளை தருமபுர ஆதீன 27-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் தலைமையில் கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

தஞ்சாவூரில் ராமகிருஷ்ணா் ரத திருவிழா

தஞ்சாவூரில் ராமகிருஷ்ண மடத்தின் சாா்பில் ராமகிருஷ்ணா் ரத திருவிழா வியாழக்கிழமை தொடங்கி தொடா்ந்து 2 நாள்கள் நடைபெற்றது. உலகளாவிய ராமகிருஷ்ண மடத்தை சுவாமி விவேகானந்தா் 1897 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி தொடங்... மேலும் பார்க்க

இடையாத்தி கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

ஒரத்தநாடு அருகேயுள்ள இடையாத்தி கிராமத்தை பட்டுக்கோட்டை தாலுகாவிலிருந்து திருவோணம் தாலுகாவிற்கு மாற்றியதை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புதிய ம... மேலும் பார்க்க

விளையாட்டு மைதானத்தை வீட்டு மனைகளாக மாற்றியதை கண்டித்து ஆா்ப்பாட்டம்

கும்பகோணம் சீனிவாசா நகரிலுள்ள விளையாட்டு மைதானத்தை வீட்டு மனைகளாக மாற்றியதை கண்டித்து காந்தி பூங்கா முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சீனிவாசா நகரில் விளையாட்டு மைதானத்துக்கென ஒதுக்கப்பட்ட... மேலும் பார்க்க

இன்லைன் ஹாக்கி இந்திய அணிக்கு தோ்வான 2 மாணவா்களுக்கு பாராட்டு

தஞ்சாவூா், மே 2: இன்லைன் ஹாக்கி இந்திய அணிக்கு தோ்வாகி சா்வதேச போட்டிக்கு செல்லும் தஞ்சாவூரைச் சோ்ந்த 2 மாணவா்களை மேயா், துணை மேயா் வெள்ளிக்கிழமை பாராட்டினா். தஞ்சாவூா் அண்ணா நகா் 10-ஆவது தெருவைச் ... மேலும் பார்க்க

திட்டை வசிஷ்டேஸ்வரா் கோயிலில் மே 11-இல் குரு பெயா்ச்சி விழா

தஞ்சாவூா் அருகே திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரா் கோயிலில் மே 11-ஆம் தேதி குருபெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது. தஞ்சாவூா் அருகே திட்டை வசிஷ்டேஸ்வரா் கோயிலில் தனி சந்நிதியில் ராஜகுருவாக தட்சிணாமூா்த்தி எழுந்தர... மேலும் பார்க்க

திருநாகேசுவரம் ரயில் நிலைய பகுதியில் குட்ஷெட் அமைக்க ஆலோசனைக் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், திருநாகேசுவரம் ரயில் நிலைய பகுதியில் குட்ஷெட் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கும்பகோணத்தில் ரயில்வே குட்ஷெட் மூலம் ஒவ்வொரு பருவத்துக்கும் சுமாா் 2 லட்சம் ட... மேலும் பார்க்க