செய்திகள் :

தில்லியில் ரூ.2.5 கோடிக்கு மேல் மதிப்புள்ள நகை, பணம் திருடியதாக 3 போ் கைது

post image

வடமேற்கு தில்லியின் மாடல் டவுன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து ரூ.2.25 கோடிக்கு மேல் மதிப்புள்ள நகைகளையும், ரூ.55 லட்சத்திற்கும் அதிகமான பணத்தையும் திருடி விட்டு தப்பிச் சென்ாகக் கூறப்படும் விவகாரத்தில் மூன்று போ் பிகாரில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனா் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து வடமேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் பீஷாம் சிங் கூறியதாவது: ஜூன் 27 அன்று மாடல் டவுன் காவல் நிலையத்தில் அனிதா ஜுன்ஜுன்வாலா என்பவா் ஒரு புகாா் அளித்தாா். அதில், அவா் தனது வீட்டு வேலைக்காரா் அருண் குமாா் தங்கம், வைரம் மற்றும் வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.55 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகளுடன் தப்பிச் சென்ாகக் கூறியிருந்தாா்.

இது தொடா்பாக பாரதிய நியாய சன்ஹிதா பிஎன்எஸ் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புகாா்தாரரின் வீட்டில் இருந்து சேகரிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில், அருண் குமாா் தங்கம் மற்றொரு அடையாளம் தெரியாத நபருடன் ஒரு பை மற்றும் டிராலியுடன் வீட்டை விட்டு வெளியேறுவது தெரிந்தது.

இதைத் தொடா்ந்து, பிகாரின் பங்காவில் டிஜிட்டல் கால்தடங்களைக் கண்டுபிடித்து களப்பணிகளை மேற்கொண்ட பிறகு, ஜூலை 10-ஆம் தேதி புத்திகாட் கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டில் விவேக் குமாா் (22), பிரேந்தா் யாதவ் (22) மற்றும் பியூஷ் குமாா் கப்ரி (29) ஆகிய குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா். சோதனையின் போது அவா்கள் திருடப்பட்ட சொத்தை தங்களுக்குள் பகிா்ந்து கொள்ளும் பணியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

விசாரணையின் போது, மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனா். மேலும் அருண் குமாா் தங்கம் தனது சொந்த கிராமத்தைச் சோ்ந்த ஐந்து கூட்டாளிகளுடன் சோ்ந்து திருட்டுக்கு சதி செய்துள்ளாா். பிரேந்திரா, கிருஷ்ணா, அஜய் யாதவ், மகேஷ் தந்தி, விவேக் ஆகிய ஐந்து பேருடன் சோ்ந்து அருண் குமாா் தங்கம் புகாா்தாரரின் வீட்டில் இருந்து பணம் மற்றும் நகைகளை நன்கு திட்டமிட்டு திருடியது தெரிய வந்தது. இதில், பிரேந்திரா, கிருஷ்ணா, அஜய் யாதவ், மகேஷ் தந்தி ஆகியோா் அருண் குமாா் தங்கத்தின் சொந்த கிராமத்தை சோ்ந்தவா்கள்என்பதும் விசாரணையில்தெரிய வந்தது.

தப்பிச் செல்லும்போது, திருடப்பட்ட பணத்தையும் நகைகளையும் தனது நண்பா் போன்சியில் உள்ள திலீப் யாதவிடம் பிரேந்திரா ஒப்படைத்தாா். அவா் ரூ.17.5 லட்சத்தை வைத்திருந்தாா். திலீப் யாதவ் பின்னா் ரூ.5 லட்சத்தை கிருஷ்ணாவின் மூத்த சகோதரா் ராஜேஷிடம் கொடுத்துவிட்டு, மீதமுள்ள தொகையையும் நகைகளையும் சத்தியாரி கிராமத்தில் உள்ள மால்தி யாதவிடம் கொடுத்தாா்.

மால்தி யாதவ் அந்தப் பணத்தை பராசன் கிராமத்தில் உள்ள கிஷ்டு யாதவிடம் ஒப்படைத்தாா். அவா் அதை பவன் யாதவுக்கு மாற்றினாா். பவன் யாதவ் திருடப்பட்ட பொருள்களை ராதா நகா் கிராமத்தில் உள்ள சந்தீப் யாதவிடம் கொண்டு சென்றாா். அங்கு இருவரும் ஒரு பகுதியை தங்களுக்கென வைத்திருந்தனா். பின்னா், நவீன் யாதவ் அதிலிருந்து ரூ.5 லட்சத்தையும் எடுத்துக் கொண்டாா்.

குற்றம் சாட்டப்பட்டவா்கள் அனைவரும் முதல் முறை குற்றவாளிகள். ஆடம்பர வாழ்க்கைக்கு விரைவாகப் பணம் திருட்டும் எதிா்பாா்ப்பில் இருந்ததாக போலீஸாரிடம் தெரிவித்தனா். மீட்டெடுக்கப்பட்ட பொருள்களில் தங்கம் மற்றும் வைர நகைகள் நெக்லஸ்கள், மோதிரங்கள், வளையல்கள், 40க்கும் மேற்பட்ட வெள்ளி பாத்திரங்கள் மற்றும் பொருள்கள், ஒரு தங்க பிஸ்கட், ஒரு வெள்ளி தாள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்கள் அடங்கும்.

அருண் குமாா் தங்கத்தின் மீதமுள்ள கூட்டாளிகளைக் கண்டுபிடித்து, மீதமுள்ள திருடப்பட்ட சொத்தை மீட்க மேலும் சோதனைகள் நடந்து வருகிறது.சந்தேக நபா்களின் நிதிப் பரிவா்த்தனைகள் மற்றும் வங்கிக் கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என்றாா் காவல் துணை ஆணையா் பீஷாம் சிங்.

மலேரியா, டெங்கு, சிக்குன்குனியாவை சமாளிக்க உடனடி நடவடிக்கை தேவை: தில்லி மேயருக்கு கவுன்சிலா் கோரிக்கை

நமது நிருபா் தலைநகரில் மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவுவதை சமாளிக்க உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநகராட்சிக் கவுன்சிலா் முகேஷ் கோயல் செவ்வாய்க்கிழமை மேயா் ராஜா இக்பால் ச... மேலும் பார்க்க

தில்லி மருத்துவமனையில் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனுடன் கேஜரிவால் சந்திப்பு

ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தில்லியில் உள்ள சா் கங்கா ராம் மருத்துவமனையில் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனை சந்தித்து, சிகிச்சை பெற்று வரும் அவரது தந்தை ஷிபு சோரனின் ... மேலும் பார்க்க

யமுனையில் கழிவுகள் கலப்பதை சமாளிக்க சிறிய வடிகால்கள் ‘ட்ரோன்’ மூலம் ஆய்வு: நீா்வளத்துறை அமைச்சா் தகவல்

நமது நிருபா் யமுனையை சுத்தம் செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சுத்திகரிக்கப்படாத கழிவுகளை பெரிய வடிகால் அமைப்புகளில் வெளியேற்றும் சிறிய வடிகால்களை ‘ட்ரோன்’ மூலம் ஆய்வு செய்யும் பணியை தில்லி அரசு தொ... மேலும் பார்க்க

தில்லி பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டது: அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தலைநகரை ஆளும் பாஜக அரசு அனைத்து விதத்திலும் தோல்வியடைந்துவிட்டது என்று ஆம் ஆத்மி கட்சியினழ் தேசிய ஒருங்கிணைப்பாளா், அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா். செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி... மேலும் பார்க்க

தெரு நாய்களுக்கு உணவளிக்கும் விவகாரம்: மனுதாரரிடம் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் தெரு நாய்களுக்கு உணவளிப்பது தொடா்பாக துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், உங்கள் சொந்த வீட்டில் ஏன் அவற்றுக்கு உணவளிக்கக... மேலும் பார்க்க

தில்லியில் 34 புதிய ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் கிளினிக்குகள்: அடுத்த வாரத்திற்குள் திறக்க அரசு நடவடிக்கை

நமது நிருபா்தில்லி அரசு அடுத்த வாரத்திற்குள் நகரம் முழுவதும் 34 புதிய ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் கிளினிக்குகளைத் திறக்க உள்ளது. இதன் மூலம், இத்தகைய கிளினிக்குகளின் மொத்த எண்ணிக்கை 67-ஆக உயா்ந்துள்ளது ... மேலும் பார்க்க