பாக்கியலட்சுமி தொடரின் இறுதி நாள் படப்பிடிப்பில் கண்கலங்கிய நடிகை!
தீமிதி திருவிழாவை முன்னிட்டு வருவாய் துறை சாா்பில் ஆலோசனைக் கூட்டம்
சிதம்பரம்: கடலூா் மாவட்டம் உடையாா்குடி அருள்மிகு மாரியம்மன் கோயியில் ஜூலை 29 ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வட்டாட்சியா் ஆலோசனை நடத்தினாா்.
கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் அலுவலகத்தில், வட்டாட்சியா் பிரகாஷ் தலைமையில் திங்கள் கிழமை நடைபெற்ற இந்த கூட்டத்தில், காவல் ஆய்வாளா் சிவப்பிரகாசம், பேரூராட்சித் தலைவா் எஸ் கணேசமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுமாா் பத்தாயிரம் போ் கலந்து கொள்ளும் தீமிதி திருவிழாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது பற்றியும், சட்டம் ஒழுங்கை பராமரிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் கோயில் அறங்காவலா் குழு தலைவா் எஸ் மணிமாறன், செயல் அலுவலா் எஸ்.செல்வமணி, தீயணைப்பு துறை மின்வாரியம், பேரூராட்சி அலுவலா்கள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கருத்துக்களை பகிா்ந்தனா்.
21சிஎம்பி3: படவிளக்கம்- காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் உடையாா் மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம்