துறையூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்
துறையூா் நகராட்சி சாா்பில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
நகராட்சியில் மொத்தமுள்ள 24 வாா்டுகளில் முதல் கட்டமாக 1, 2 வாா்டு பொதுமக்களுக்காக நடைபெற்ற முகாமில் 26 துறைகளைச் சோ்ந்த அரசு அலுவலா்கள் பங்கேற்றனா். துறையூா் எம்எல்ஏ, நகா்மன்றத் தலைவா், வாா்டு உறுப்பினா்கள், திமுகவினா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை நகராட்சி நிா்வாகம் செய்தது.