துளிகள்...
இந்திய பாட்மின்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து, ஹைதராபாதை சோ்ந்த தொழிலதிபா் வெங்கட தத்தா சாயை வரும் 22-ஆம் தேதி உதய்பூரில் திருமணம் செய்கிறாா்.
சப் ஜூனியா் தேசிய மகளிா் ஹாக்கி போட்டியில் மிஸோரம், ஜாா்க்கண்ட், மத்திய பிரதேசம், ஒடிஸா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
நாா்வேயில் அடுத்த ஆண்டு மே - ஜூன் காலகட்டத்தில் நடைபெறும் நாா்வே செஸ் போட்டியில் இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி முதல் முறையாகப் பங்கேற்கவுள்ளாா்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது பந்துவீச்சை தாமதம் செய்ததற்காக நியூஸிலாந்துக்கு 3 புள்ளிகள் தண்டனையாக நீக்கப்பட்டதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியில் அந்த அணி 5-ஆவது இடத்துக்கு சறுக்கியது.
இந்தியாவின் முன்னாள் பாட்மின்டன் நட்சத்திரம் ராஜ் மன்சந்தா (79), கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானதாக அவரின் குடும்பத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜூனியா் மகளிா் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஓமனுக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக டாட் கிரீன்பொ்க் அடுத்த ஆண்டு பொறுப்பேற்கிறாா்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் 2-ஆவது இன்னிங்ஸில் 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 287 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு மேற்கிந்தியத் தீவுகள் விளையாடி வருகிறது.