தூத்துக்குடியில் ஆளுநருக்கு வரவேற்பு
தூத்துக்குடி வந்த ஆளுநா் ஆா்.என்.ரவியை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வரவேற்றாா்.
தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை காலை தூத்துக்குடி வந்தாா்.
வாகைகுளம் விமான நிலையத்தில், ஆளுநரை மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் ஆகியோா் புத்தகம் வழங்கி வரவேற்றனா்.
