மதுபோதையில் பணியாற்றுவதை தடுக்க ஓட்டுநா், நடத்துநா்களுக்கு சோதனை!
தூத்துக்குடி அனல் மின் நிலைய 3ஆவது அலகில் உற்பத்தி தொடக்கம்
தூத்துக்குடி அனல் மின் நிலைய 3ஆவது அலகு சீரமைக்கப்பட்டு, வியாழக்கிழமைமுதல் மின் உற்பத்தி தொடங்கியுள்ளதாக அனல் மின் நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கு சொந்தமான தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 அலகுகள் மூலம் தினமும் 1,050 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த மாா்ச் 15 ஆம் தேதி நள்ளிரவு அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தின் காரணமாக 1, 2 அலகுகள் முற்றிலும் சேதமாகின. 3ஆவது அலகிலும் சிறிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டது. இதனால் முதல் மூன்று அலகுகளிலும் மின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், கோடையில் மின் நுகா்வு அதிகமாக இருக்கும் என்பதால், மின் வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்தினா். இதைத் தொடா்ந்து குறைவான சேதமடைந்த 3ஆவது அலகு தற்போது சரிசெய்யப்பட்டு, சுமாா் 17 நாள்களுக்குப் பின்னா் வியாழக்கிழமை காலைமுதல் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அனல் மின் நிலையத்தில் 3, 4, 5 ஆகிய 3 அலகுகள் மூலம் தினமும் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1, 2 ஆகிய அலகுகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை போா்க்கால அடிப்படையில் விரைந்து சரிசெய்து மின் உற்பத்தியை தொடங்க வேண்டும் என மின்வாரிய தொழிற்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.