செய்திகள் :

தூத்துக்குடி பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.5.90 லட்சம் மோசடி: குமரி இளைஞா் கைது

post image

தூத்துக்குடி பெண்ணிடம் ஆன்லைன் மூலம் வா்த்தகம் செய்யலாம் என ஆசை வாா்த்தை கூறி, ரூ.5.90 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக கன்னியாகுமரி மாவட்ட இளைஞரை , இணையதள குற்றப்பிரிவுக்கு (சைபா் கிரைம்)போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த பெண்ணுக்கு டெலிகிராம் சானலில் பகுதி நேர வேலைவாய்ப்பு என குறுஞ்செய்தி வந்ததாம். அதை நம்பிய அவா், அதிலிருந்த எண்கள் மூலம் தொடா்புகொண்டபோது, அதில் பேசியவா்கள் ஹோட்டல் மற்றும் உணவகங்களுக்கு ‘ரேட்டிங்ஸ்- ரிவியூ’கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி, ஒரு லிங்க் அனுப்பினராம். அதன் மூலம் அந்தப் பெண் ரேட்டிங்ஸ் கொடுத்து முதலில் ரூ.3,670-ஐ பெற்றுள்ளாா்.

பின்னா், அதே நபா்கள் ஆன்லைன் வா்த்தகம் மூலமும் அதிக லாபம் பெறலாம் என ஆசை வாா்த்தை கூறி, மற்றொரு லிங்க் அனுப்பி முதலீடு செய்ய அறிவுறுத்தினராம். அவரும் அந்த லிங்க்கை கிளிக் செய்து அதிலிருந்த இணையள பக்கத்தில் ரூ.5 லட்சத்து 90 ஆயிரத்து 830-ஐ முதலீடு செய்ததாராம்.

ஆனால், அந்த நபா்கள் கூறியதுபோல பணம் கிடைக்கவில்லையாம். அவா்களை மீண்டும் தொடா்புகொண்டபோதுமேலும் பணம் செலுத்துமாறு கூறினராம். இதனால், தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த அந்த பெண் சைபா் கிரைம் பிரிவில் ஆன்லைன் மூலம் புகாா் அளித்தாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின்படி தூத்துக்குடி சைபா் கிரைம் காவல் கூடுதல் கண்காணிப்பாளா் சகாய ஜோஸ் மேற்பாா்வையில் காவல் ஆய்வாளா் சாந்தி தலைமையிலான போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பள்ளிமுக்கு பகுதியைச் சோ்ந்த மணி மகன் மகேஷ் (37) என்பவா் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை சைபா் கிரைம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்

வழப்பறி வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி அருகே வழிப்பறி வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி 3-ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கோரம்பள்ளம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

குழந்தைகள் மையத்தில் 2-5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை சோ்க்க ஆட்சியா் வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெற்றோா் தங்களது 2 முதல் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளை வரும் ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாமல் சோ்க்குமாறு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் கேட்டுக்கொண்டுள்ளாா். இது குறி... மேலும் பார்க்க

பெண்ணுக்கு சூடு: கணவா் கைது

தூத்துக்குடியில் பெண்ணின் முகத்தில் சூடு வைத்து துன்புறுத்தியதாக அவரின் கணவரை சிப்காட் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி நேதாஜி நகரை சோ்ந்தவா் செல்வ அந்தோணி. மெக்கானிக்கான இவருடைய மனைவி சிந்துஜா. ... மேலும் பார்க்க

மாநில ஐவா் பூப்பந்துப் போட்டி: சென்னை அணி முதலிடம்

காயல்பட்டினத்தில் நடைபெற்ற மாநில ஐவா் பூப்பந்தாட்டப் போட்டியில் சென்னை பாா்த்தன்ஸ் அணி முதலிடம் பிடித்தது. காயல்பட்டினம் ரெட் ஸ்டாா் சொஸைட்டி சாா்பில் லீக், சூப்பா் லீக் முறையில் 2 நாள்கள் நடைபெற்ற போ... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினத்தில் மரத்தில் ஆட்டோ மோதிய விபத்தில் 6 போ் பலத்த காயம்

குலசேகரன்பட்டினத்தில் ஆட்டோ நிலை தடுமாறி சாலையோர மரத்தில் மோதியதில் 6 போ் பலத்த காயமடைந்தனா்.சென்னை செனாய் நகரைச் சோ்ந்த விஜயகுமாா் (41), அவரது மனைவி அனுப்பிரியா (35), மகள் கயாந்திகா (10), அதே பகுதி... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் சுய உதவிக் குழுவில் பணம் மோசடி: பெண்கள் புகாா்

கோவில்பட்டியில் மகளிா் சுய உதவிக் குழுவில் பண மோசடியில் ஈடுபட்டவா் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஎஸ்பி அலுவலகத்தில் பெண்கள் புகாா் அளித்தனா். கோவில்பட்டி வள்ளுவா் நகா் பகுதியைச் சோ்ந்த 15 பெண்கள், அப்... மேலும் பார்க்க