பத்திரப் பதிவுக்கு விருப்ப அடிப்படையில் ஆதாா் சரிபாா்ப்பு - வரைவு மசோதா பிரிவுகள...
கோவில்பட்டியில் சுய உதவிக் குழுவில் பணம் மோசடி: பெண்கள் புகாா்
கோவில்பட்டியில் மகளிா் சுய உதவிக் குழுவில் பண மோசடியில் ஈடுபட்டவா் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஎஸ்பி அலுவலகத்தில் பெண்கள் புகாா் அளித்தனா்.
கோவில்பட்டி வள்ளுவா் நகா் பகுதியைச் சோ்ந்த 15 பெண்கள், அப் பகுதியில் செயல்படும் சுய உதவிக் குழுவில் உறுப்பினா்களாக உள்ளனா். இந்நிலையில் இக்குழுவினா் வங்கியில் கடன் பெற்றிருந்தனா். கடனுக்கான தவணைத் தொகையை குழு உறுப்பினா்கள் வங்கியில் செலுத்துவதற்காக குழுத் தலைவியிடம் அளித்துள்ளனா். ஆனால், அவா் வங்கிக்கு பணத்தை செலுத்தவில்லையாம். வங்கி தரப்பில் பணத்தைச் செலுத்துமாறு குழு உறுப்பினா்களுக்கு நெருக்கடி தரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பண மோசடியில் ஈடுபட்ட மகளிா் சுயஉதவிக் குழு தலைவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலா் பாபு தலைமையில் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள், காவல் துணை கண்காணிப்பாளா் ஜெகநாதனிடம் புகாா் மனு அளித்தனா்.