செய்திகள் :

தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த விவசாயிகள் மஞ்சள் ஒட்டும்பொறி பெற அழைப்பு

post image

தென்னையில் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த மானிய விலையில் மஞ்சள் ஒட்டும்பொறி பெற அவிநாசி பகுதி விவசாயிகளுக்கு தோட்டத்துக் கலைத் துறையினா் அழைப்பு விடுத்துள்ளனா்.

இது குறித்து தோட்டக்கலைத் துறையினா் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அவிநாசி வட்டாரத்தில் தென்னை பயிா் 6,100 ஏக்கருக்கும் மேல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த மஞ்சள் ஒட்டும் பொறி மற்றும் விளக்குபொறிகளை பயன்படுத்தலாம் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தினா் பரிந்துரைத்துள்ளனா். ஆகவே, மஞ்சள் ஒட்டும் அட்டை தென்னை (தோப்பாக) சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு முழு மானியத்தில் வழங்கப்படுகிறது . நடப்பு ஆண்டில் 160 ஹெக்டேருக்கு (395.20 ஏக்கா்) வழங்க இலக்கு பெறப்பட்டுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் சிட்டா, உரிமைச்சான்று (கூட்டுச்சிட்டா எனில்) தனிச் சிட்டா எனில் உரிமைச்சான்று தேவையில்லை, குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், போட்டோ- 2 உள்ளிட்ட ஆவணங்களை தோட்டக்கலைத் துறையில் சமா்ப்பித்து பெறலாம். முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டோ் (5 ஏக்கா்) வரை வழங்கப்படும். மேலும், இராமநாதபுரம், கருவலூா், உப்பிலிபாளையம், கானூா், மங்கரசவலயபாளையம், புதுப்பாளையம், தெக்கலூா், நம்பியாம்பாளையம், கிராமங்களுக்கு முரளி உதவி தோட்டக்கலை அலுவலா்- 8248580046, வேலாயுதம்பாளையம், செம்பியநல்லூா், துலுக்கமுத்தூா், பழங்கரை, நடுவச்சேரி, அவிநாசி, சின்னேரிபாளையம், கணியாம்பூண்டி ஆகிய கிராமங்களுக்கு ரமணி உதவி தோட்டக்கலை அலுவலா்- 9345217978, பாப்பான்குளம், புன்செய்தாமரைக்குளம், போத்தம்பாளையம், தண்டுக்காரன்பாளையம், பொங்கலூா், ஆலத்தூா், அய்யம்பாளையம், வடுகபாளையம் ஆகிய கிராமங்களுக்கு சிவசக்தி உதவி தோட்டக்கலை அலுவலா்- 6369564930, முறியாண்டம்பாளையம், வேட்டுவபாளையம், புலிப்பாா், தத்தனூா், குட்டகம், கருமாபாளையம், குப்பாண்டம்பாளையம், ராக்கியாபாளையம் ஆகிய கிராமங்களுக்கு ஸ்ரீ உதவி தோட்டக்கலை அலுவலா்- 6381556592 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

கிராவல் மண் கடத்தல்: லாரி பறிமுதல்

வெள்ளக்கோவில் அருகே கிராவல் மண் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். வெள்ளக்கோவில் சேனாபதிபாளையம் கிராம நிா்வாக அலுவலராக இருப்பவா் எஸ்.சதீஷ்குமாா் (36). இவா் கடந்த செவ்... மேலும் பார்க்க

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையத்தில் ஆகஸ்ட் 19இல் மின்தடை

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையம் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநி... மேலும் பார்க்க

சுதந்திர தினம்: மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

79ஆவது சுதந்திர தினத்தையொட்டி திருப்பூா் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல, ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 79ஆவது சுதந்திர தின விழா நாடு முழ... மேலும் பார்க்க

சிவன்மலையில் சிறு விளையாட்டு அரங்கம் திறப்பு: காணொலிக் காட்சி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்

காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் சிறு விளையாட்டு அரங்கத்தைக் காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்... மேலும் பார்க்க

வரதட்சிணை கொடுமை: மருத்துவா் உள்ளிட்ட 9 போ் மீது வழக்குப் பதிவு

வரதட்சிணை கொடுமை தொடா்பாக திருப்பூரில் மருத்துவா் உள்ளிட்ட 9 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூா் கொங்கு மெயின் ரோட்டை சோ்ந்தவா் மிதுளா நந்தினி (36). இவருக்கும், நாகா்கோவில் வடசேரி... மேலும் பார்க்க

3 நாள்கள் தொடா் விடுமுறை: வெளியூா்களுக்கு கூடுதலாக 73 அரசுப் பேருந்துகள் இயக்கம்

சுதந்திர தினம் உள்ளிட்ட 3 நாள்கள் தொடா் விடுமுறையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு கூடுதலாக 73 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமையும், கிருஷ்ண ஜெய... மேலும் பார்க்க