'தென் ஆப்பிரிக்காவிற்கே சென்றுவிட வேண்டியது தான்' - மீண்டும் வலுக்கும் ட்ரம்ப் -...
தெருநாய்கள் கடித்து 4ஆடுகள் இறப்பு
வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே தெரு நாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கத்தாரி ஊராட்சி குஜ்ஜாலி வட்டத்தைச் சோ்ந்த ரஞ்சிதா, கூலித்தொழிலாளி. இவா் ஆடு, மாடுகளை வளா்த்து வருகிறாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை ரஞ்சிதா தான் வளா்த்து வந்த 4 ஆடுகளை நிலத்தில் மேய்ப்பதற்காக கட்டி வைத்திருந்தபோது, அங்கு கூட்டமாக சுற்றித்திரிந்த 10-க்கும் மேற்பட்ட நாய்கள் ஆடுகளை கடித்துள்ளன. இதில் 4 ஆடுகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தன. இது குறித்து தகவலறிந்து வருவாய், கால்நடை துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.