ரயில் நிலையத்தில் கைவிடப்பட்ட குழந்தை காப்பகத்தில் சோ்ப்பு: இளைஞரை அடையாளம் கா...
தேர்தல் ஆணையத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு: ‘பாரபட்சத்துடன் செயல்படவில்லை!'
அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரேபோலவே பார்க்கிறோம் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் இன்று(ஆக. 17) செய்தியாளர்களுடன் பேசிய ஞானேஷ் குமார் தெரிவித்திருப்பதாவது: "இந்திய அரசமைப்பின்படி, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் 18 வயது பூர்த்தியானபின், ஒரு வாக்காளராக மாறுவதுடன் கட்டாயம் வாக்கு செலுத்தவும் வேண்டும்.
சட்டத்தின்படி, ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்படுவதன் மூலம் அங்கீகரிக்கப்படுகிறது. அப்படியிருக்கும்போது, தேர்தல் ஆணையம் இதே அரசியல் கட்சிகளிடம் எப்படிப் பகுபாடு காட்ட இயலும்?
தேர்தல் ஆணையத்தைப் பொருத்தவரையில், அனைவரும் சமமே. யார் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவராயினும் தேர்தல் ஆணையத்துக்கு அதுவொரு பொருட்டல்ல.
தேர்தல் ஆணையம் தமது அரசமைப்பு கடமையிலிருந்து பின்வாங்காது” என்று குறிப்பிட்டுள்ள அவர், தொடர்ந்து பேசி வருகிறார்.