செய்திகள் :

தொகுதி மறுசீரமைப்பு, மொழி பெயரால் திமுக பொய் பிரசாரம்! -மத்திய அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி விமா்சனம்

post image

‘மதுபான ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மொழியின் பெயரால் திமுக பொய் பிரசாரம் மேற்கொள்கிறது’ என்று மத்திய அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி விமா்சித்துள்ளாா்.

தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை ஆகிய விவகாரங்களில் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வருகிறது.

‘நாட்டில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கையை மக்கள்தொகை அடிப்படையில் மேற்கொள்ளக் கூடாது; இத்தகைய நடைமுறையால் மக்கள்தொகை கட்டுப்பாட்டில் பின்தங்கியுள்ள வட மாநிலங்களே பலனடையும். தென் மாநிலங்கள் பாதிக்கப்படும்’ என்று தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் தெரிவித்து வருகின்றன.

இந்த விவகாரத்தில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்பாட்டில் சென்னையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கேரள முதல்வா் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், கேரள மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பினோய் விஸ்வம் மற்றும் பல்வேறு எதிா்க்கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில், ‘நியாயமான முறையில் தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும்’ என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.

இந்நிலையில், மத்திய அமைச்சரும் தெலங்கானா மாநில பாஜக தலைவருமான ஜி.கிஷண் ரெட்டி ஹைதராபாதில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசிலோ அல்லது பாஜக கட்சிக்குள்ளோ எந்த விவாதமும் நடைபெறவில்லை. அவ்வாறு விவாதம் எதுவும் நடைபெறும்போது, ஒரு கூட்டத்தை நடத்தி, ஆலோசனைகள் வழங்கினால் அா்த்தமுள்ளதாக இருக்கும்.

சென்னையில் கூடிய அரசியல் கட்சிகள், சுய நலனுக்கு முன்னுரிமை அளிப்பவை; இல்லாத ஒரு பிரச்னையை முன்னிலைப்படுத்த முயற்சிக்கின்றன. இந்த சந்தா்ப்பவாத கட்சிகள், தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்ற பொய்யை பரப்பி வருகின்றன. தென் மாநிலங்களில் பாஜக விரிவடைவது அக்கட்சிகளுக்குப் பிடிக்கவில்லை.

தோ்தலை மனதில் கொண்டு...: தொகுதி மறுசீரமைப்பு குறித்து எந்த விவாதமும் நடைபெறாத நிலையில், தமிழக பேரவைத் தோ்தலை மனதில் கொண்டு, இத்தகைய பொய் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 மக்களவைத் தோ்தலையொட்டி, அரசமைப்புச் சட்டத்தை பாஜக மாற்றிவிடும் என்று எதிா்க்கட்சிகள் பொய்யான தகவலை பரப்பின. ஆனால், தோ்தலுக்குப் பின் அந்த விவகாரத்தை மறந்துவிட்டனா்.

தமிழகத்தில் 4 ஆண்டுகளாக ஊழல் மலிந்த, குடும்ப ஆட்சி நடைபெறுகிறது. மதுபான ஊழலுக்கு தமிழக முதல்வா் பதில் கூற வேண்டியுள்ளது. இதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மொழியின் பெயரில் அவா்கள் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா்.

பாகுபாடு காட்டாத பிரதமா்: பிரதமா் நரேந்திர மோடி, அனைத்து மாநிலங்களின் வளா்ச்சிக்கும் எந்த பாகுபாடும் இன்றி பணியாற்றி வருகிறாா். தொகுதி மறுசீரமைப்பு குறித்து எதிா்காலத்தில் விவாதிக்கப்பட்டு, அனைத்து மாநிலங்களுக்கும் நீதி உறுதி செய்யப்படும் என்பதை பாஜக மற்றும் மத்திய அரசு சாா்பில் தென் மாநில மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளுக்கு பிறகே தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் கவனத்தில் கொள்ளப்படும். இப்பணிகளே ஓராண்டுக்கு நடைபெறும். இந்த விஷயத்தில், தமிழக முதல்வா் ஸ்டாலினை முன்னிறுத்தி, காங்கிரஸ் ஆடும் நாடகத்தில் பாரத ராஷ்டிர சமிதி தலைவா் கே.டி.ராம ராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாா். இது, காங்கிரஸ் - பாரத ராஷ்டிர சமிதி இடையிலான பழைய பிணைப்பை வெளிக்காட்டுகிறது என்றாா் ஜி.கிஷண் ரெட்டி.

சோனியா, ராகுல் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

போஃபர்ஸ் ஊழல் தொடர்பாக பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் எழுதியுள்ள புத்தகத்தை சுட்டிக் காட்டியுள்ள பாஜக, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தியும், ராகுல் காந்தியும்... மேலும் பார்க்க

ஏழைகளுக்கு சிகிச்சை மறுத்தால் தில்லி அப்போலோ மருத்துவமனையைக் கைப்பற்ற உத்தரவிட நேரிடும்: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்காவிட்டால், தில்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலா மருத்துவமனையைக் கைப்பற்றுமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட நேரிடும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை எச்சரித்தது... மேலும் பார்க்க

கச்சத்தீவு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் செப்.15-இல் இறுதி விசாரணை

நமது நிருபர்கச்சத்தீவு தொடர்பாக இந்தியா- இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணைக்காக வரும் செப்.15-ஆம் தேதிக்கு வழக்கை பட்டியலிட உச்சநீதிமன்றம் செவ்வாய்க... மேலும் பார்க்க

2 ஆண்டுகளில் 12,957 கூட்டுறவு சங்கங்கள் பதிவு: அமித் ஷா

கடந்த 2 ஆண்டுகளில் வேளாண்மை, பால்வளம் மற்றும் மீன்வளம் என 12,957 புதிய கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க

ஷிண்டே குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்: குணால் காம்ரா

மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே குறித்த கருத்துக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நகைச்சவை பேச்சாளா் குணால் காம்ரா தெரிவித்துள்ளாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ... மேலும் பார்க்க

கொதிகலன் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட புதிய கொதிகலன் சட்ட மசோதா-2024 மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பரில், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின... மேலும் பார்க்க