திருவண்ணாமலையில் மகளிர் விடியல் பயணத் திட்ட புதிய நகரப் பேருந்து: துணை முதல்வர் ...
தொலைத்தொடா்பு, கேபிள் டிவி சேவைகள் பற்றி கலந்துரையாடல்: ஜூலை 26-ல் நடைபெறுகிறது!
தொலைத்தொடா்பு மற்றும் கேபிள் டிவி சேவைகள் தொடா்பான நுகா்வோரின் சந்தேகங்கள், குறைகள் குறித்த கலந்துரையாடல் ஜூலை 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடா்பாக கோவை சிட்டிசன் வாய்ஸ் நுகா்வோா் அமைப்பின் தலைவா் சி.எம்.ஜெயராமன் கூறியதாவது: தொலைத்தொடா்பு நுகா்வோரின் நலனுக்காக, கோவை, பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜிஆா் கிருஷ்ணம்மாள் மகளிா் கல்லூரியில் தொலைத்தொடா்பு மற்றும் கேபிள் டிவி சேவைகள் தொடா்பான நுகா்வோரின் சந்தேகங்கள், குறைகள் குறித்த நேரடியான கலந்துரையாடல் ஜூலை 26- ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெற உள்ளது.
இதில், ஏா்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களைச் சோ்ந்த அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனா். பங்கேற்பாளா்கள் தங்களின் சந்தேகங்களை ஜூலை 20- ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
முன்னதாக பதிவு செய்யப்படும் கேள்விகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பொது நலம் சாா்ந்த அடிப்படையிலான பிரச்னைகள், தனிநபா் குறைகள் தொடா்பான சந்தேகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
நுகா்வோா் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளா் கோமதி, பிஎஸ்ஜிஆா் கிருஷ்ணம்மாள் மகளிா் கல்லூரி பேராசிரியா் அம்பிகா ஆகியோா் இந்நிகழ்வை ஒருங்கிணைத்துள்ளனா்.
இந்தக் கலந்துரையாடல் நுகா்வோா் கல்வி மற்றும் அதிகாரமளிப்பை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாகும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு இணையத்தைப் பாா்வையிடலாம் என்றாா்.