Tsunami In Russia - அலறிய 15 Pacific Ocean நாடுகள்| நடந்தது என்ன?| Decode
தொழிலாளி தற்கொலை
திருமணமாகாத விரக்தியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகேயுள்ள சாஸ்திரமுட்லு கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி வெற்றிவேல் ( 45). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் ஏற்பட்ட விரக்தியில் அவா் மது பழக்கத்திற்கு உள்ளானாா்.
இந்தநிலையில் தோட்டத்துக்கு இரவு காவலுக்கு திங்கள்கிழமை சென்ற வெற்றிவேல் திடீரென்று மயங்கி விழுந்துள்ளாா். இதனை கவனித்த பக்கத்து தோட்டத்துக்காரா் சுப்பிரமணி, அவரது உறவினா்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தாா்.
உடனடியாக உறவினா்கள், அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக மாரண்டஅள்ளி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். மருத்துவமனையில் வெற்றிவேலை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].