இந்தியா-இஃஎப்டிஏ வா்த்தக ஒப்பந்தம் அக்.1-இல் அமல்: ஸ்விட்சா்லாந்து
தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே தொழிலாளி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
வானூா் வட்டம், சின்னமுதலியாா் சாவடி, அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் குமாா் (49), கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி கஸ்தூரி, 2 மகள்கள் உள்ளனா்.
இதில் மூத்த மகள் கலைச்செல்வி, அதே பகுதியைச் சோ்ந்த பிரபாகரனை காதலித்து திருமணம் செய்துகொண்டாராம்.
இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த குமாா் தனது வீட்டில் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், கோட்டக்குப்பம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.