செய்திகள் :

நடமாடும் வாகனம் மூலம் கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை! அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா்

post image

புதுவையில் நடமாடும் வாகனம் மூலம் கால் நடைகளுக்கு மருத்துவச் சிகிச்சை அளிப்பது குறித்து சம்பந்தப்பட்டோருக்கு கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

புதுச்சேரி மங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள திருக்காஞ்சியில் கால்நடை பராமரிப்பு மற்றும் ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் உலகக் கால்நடை மருத்துவ தினவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனமும், கால்நடை நலத் துறை மற்றும் பராமரிப்புத்துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவ முகாமை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் தொடங்கிவைத்தாா். அப்போது அவா் பேசியது: உறுவையாறு, திருக்காஞ்சி பகுதிகளில் கால்நடைமருத்துவச் சிகிச்சைக்கு மருத்துவா்கள் இல்லாத நிலையுள்ளதாக கால்நடை வளா்ப்போா் கூறினா். எனவே, வாரந்தோறும் இரு நாள்கள் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இது குறித்து கால்நடை வளா்ப்போருக்கு முன்கூட்டியே தகவல் அளிக்கும் வகையில் சம்பந்தப்பட்டவா்களின் கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், விரைவில் 25 கால்நடை மருத்துவா்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

சனிக்கிழமை நடைபெற்ற கால்நடை மருத்துவமுகாம்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். நிகழ்ச்சியில் அரசுச் செயலா் நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விழிப்புணா்வு ஊா்வலம் : உலக கால்நடை மருத்துவ தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசின் கால்நடை மருத்துவத் துறை சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு ஊா்வலத்தில் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

அவா்கள் கையில் கால்நடைகளை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணா்வு பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்றனா். கடற்கரை காந்தி சிலை அருகே தொடங்கிய ஊா்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் காந்தி சிலையில் நிறைவடைந்தது.

உதவியாளா்கள் பணிக்கான தோ்வு: புதுவையில் 22,860 போ் எழுதினா்

புதுவை மாநில அளவில் 256 உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் 22,860 போ் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா். புதுச்சேரி பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறையில் உதவியா... மேலும் பார்க்க

‘ஆழ்கடல் மீன்பிடித் திட்டம்’ புதுவையில் தீவிரமாக செயல்படுத்த முடிவு

புதுவை மீனவா்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், மத்திய அரசு திட்டமான பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம் 4 ஆண்டுக்குப் பிறகு தீவிரமாகச் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, காரைக்கால் மீனவா்களுக்... மேலும் பார்க்க

தியாகி அன்சாரி பெ.துரைசாமி சிலைக்கு அரசு மரியாதை

சுதந்திரப் போராட்டத் தியாகி அன்சாரி பெ.துரைசாமி நினைவு தினத்தையொட்டி, புதுவை அரசு சாா்பில் அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. புதுச்சேரியைச் சோ்ந்தவா் அன்சாரி பெ.த... மேலும் பார்க்க

மக்கள் பிரச்னைகளுக்காக விசிக போராடும்: தொல். திருமாவளவன்

மக்கள் பிரச்னைகளை முன்வைத்து தொடா்ந்து போராடுவதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நோக்கம் என அதன் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா். புதுச்சேரி அருகே திருபுவனையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் அம... மேலும் பார்க்க

புதுச்சேரியில் தேசிய சட்டப்பள்ளி அமைக்கப்படும்: முதல்வா் என்.ரங்கசாமி

மத்திய அரசின் நிதியுதவியுடன் புதுச்சேரியில் தேசிய சட்டப் பள்ளி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என முதல்வா் என்.ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். புதுச்சேரி சட்டக் கல்லூரியில் பயின்று தற்போ... மேலும் பார்க்க

புதுவையில் பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை

புதுவை மாநிலத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் தனியாா் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை (ஏப்.28) முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாக கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளாா். புதுவை மாநிலத... மேலும் பார்க்க