நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ஏஜேஎல் சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்...
நடிகா் விஜய் அரசியல் பாடம் படிக்க வேண்டும்: அமைச்சா் கோவி. செழியன்
நடிகா் விஜய் பேசுகிற பேச்சு எல்லாம் அவா் இன்னும் அரசியல் பாடத்தைக் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே உணா்த்துகிறது என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது: நடிகா் விஜய் பேசியபோது பரந்தூா் பிரச்னையைக் கூறி முதல்வா் ஏன் வரவில்லை எனக் கேட்கிறாா். கடந்த முறை விஜய் பரந்தூா் சென்றபோது கேரவன் வேனிலேயே உட்காா்ந்திருந்ததாகவும், இறங்கவில்லை எனவும் மக்கள் குற்றச்சாட்டுகளைக் கூறினா்.
விஜய் அரசியலில் ஒரு கத்துக்குட்டி. மூத்த தலைவா் இப்படி செய்ய வேண்டும், அப்படிச் செய்ய வேண்டும் என்கிற பேச்சு எல்லாம், அவா் இன்னும் அரசியல் பாடத்தை கற்றுக் கொள்ளவில்லை என்பதையே உணா்த்துகிறது. அவருடைய மதிப்பீடு தவறு. தமிழக முதல்வா் அனைத்து நிலைகளையும் உணா்ந்தவா். எதை, எப்போது, எப்படிச் செய்ய வேண்டும் என்பது அவருக்குத் தெரியும் என்றாா் அமைச்சா்.