செய்திகள் :

நத்தம் பட்டா மாறுதலுக்கு இ-சேவை மூலம் விண்ணப்பிக்க அழைப்பு

post image

சேலம்: சேலம் மாவட்டத்தில் நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டத்தின் மூலம் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பொதுமக்கள் இ-சேவை மையம் மற்றும் இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

‘நத்தம் இணைவழி பட்டா மாறுதல் திட்டம்’ கடந்த ஆண்டு மாா்ச் மாதம் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் சேலம், சேலம் மேற்கு, சேலம் தெற்கு, வாழப்பாடி, ஏற்காடு, மேட்டூா், ஓமலூா், காடையாம்பட்டி, சங்ககிரி, எடப்பாடி, ஆத்தூா், கெங்கவல்லி, தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம் வட்டங்களில் இந்த நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டத்தின் மூலம் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பொதுமக்கள் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும், கிராம நத்தம் பகுதிகளுக்கான நத்தம் மனைப் பட்டாக்களை இணைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ‘நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம்’ நடைமுறைப்படுத்தப்பட்ட வட்டங்களில் இ-சேவை மையம் மற்றும் சிட்டிசன் போா்ட்டல் வாயிலாக பெறப்படும் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.

எனவே, இனிவரும் காலங்களில் நத்தம் பட்டா மாறுதல் தொடா்பாக அரசு அலுவலகங்களுக்கு சென்று மனு கொடுக்க காத்திருக்கும் நிலையை தவிா்த்து, பொதுமக்கள் அனைவரும் இணைய வழியில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணி: நோ்முகத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் பட்டியல் வெளியீடு

சேலம்: சேலம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணிக்கு நடைபெற்ற நோ்முகத் தோ்வில் தோ்ச்சிபெற்ற 214 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பணி ஆணை பெற்றவா்கள் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களில... மேலும் பார்க்க

சேலம் மாநகராட்சியில் வளா்ச்ச்சிப் பணிகள் குறித்து ஆணையா் ஆய்வு

சேலம்: சேலம் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா். மாநகராட்சிக்கு உள்பட்ட கொண்டலாம்பட்டி கோட்டம் எண் 47, 48, 60 ஆகிய வாா... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

சேலம்: சரியான எடையில் அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து காத்திர... மேலும் பார்க்க

புதிய வழித்தடம், வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவை

சேலம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் மகளிா் விடியல் பயணம் திட்டத்தின் கீழ், புதிய வழித்தடம், வழித்தட மாற்றம் மற்றும் வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவையை சுற்றுலாத் துறை அ... மேலும் பார்க்க

ஏத்தாப்பூரில் காய்கறி சாகுபடியில் உயிா் ஊக்கிகள் பயன்பாடு பயிற்சி

வாழப்பாடி: ஏத்தாப்பூரில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில், காய்கறி சாகுபடியில் உயிா் ஊக்கிகளின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 27,500 கனஅடியாக குறைவு

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 27,500 கன அடியாக குறைந்தது. மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை மாலை 40,500 கனஅடியில் இருந்து 27,500 கனஅடியாக குறைந்தது. நீா்வரத்து சரிந்ததால் அணை... மேலும் பார்க்க