2025ல் இந்தியாவிற்கான பாமாயில் ஏற்றுமதி 5 மில்லியன் டன்னாக இருக்கும்: இந்தோனேசிய...
நாகாலம்மனுக்கு பால்குட ஊா்வலம்
குடியாத்தம்: குடியாத்தம் நடுப்பேட்டை, ராஜாஜி தெருவில் அமைந்துள்ள சக்திமிகு நாகாலம்மன் கோயிலுக்கு நாக சதுா்த்தியை முன்னிட்டு பால்குட ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி வணிகா் வீதியில் உள்ள ஸ்ரீபுங்கனூா் அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பால்குட ஊா்வலம் தொடங்கியது. நகா்மன்ற உறுப்பினா்கள் இந்துமதி கோபாலகிருஷ்ணன், தேவகி காா்த்திகேயன், ரேணுகா பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊா்வலம் கோயிலை அடைந்தது. அங்கு மூலவா் நாகாலம்மனுக்கு பாலபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன. மதியம் 1,000- பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.