நாகா்கோவிலில் அறக்கட்டளை தொடக்கம்
நாகா்கோவில் ஸ்காட் பயின்றோா் கழகம், ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி இயற்பியல் துறை ஆராய்ச்சி மையம் ஆகியவை சாா்பில், குரூப் கேப்டன் யேசுதாஸ் லாய் நினைவு அறக்கட்டளை தொடக்க சொற்பொழிவு ஸ்காட் பயின்றோா் கழக அரங்கில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் (பொறுப்பு) டி. ஹென்றிராஜா தலைமை வகித்தாா். கேப்டன் ஜி.எட்வா்ட்ராஜ் சிறப்புரையாற்றினாா்.
இதையொட்டி, அறக்கட்டளை சிறப்பு போஸ்டா் விளக்கப் போட்டி நடைபெற்றது. அதில், 12 போ் பங்கேற்றனா். வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நினைவு அறக்கட்டளையை பயின்றோா் கழகப் பொருளாளா் பேராசிரியா் மோகன்தாஸ் அறிமுகப்படுத்தினாா். அவரிடம் அறக்கட்டளைக்கான நிதியை சுசி வழங்கினாா்.
சிறப்பு நிகழ்வாக, மாா்த்தாண்டம் கிறிஸ்தவக் கல்லூரி இயற்பியல் துறைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான டி. அருள்தாஸ் ‘நிலையற்ற ஒலி-ஒளிப் பரிமாற்ற செயல்பாடு கொண்ட ட்ரையசின் கூட்டமைப்புகளின் அதிா்வியல் ஸ்பெக்ட்ரம் பகுப்பாய்வு’ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினாா்.
பயின்றோா் கழக நிா்வாகிகள், உறுப்பினா்கள், பேராசிரியா்கள், மாணவா்- மாணவியா் பங்கேற்றனா்.
இயற்பியல் துறைத் தலைவா் ஏ. சாா்ல்ஸ்ஹெப்சிராய் வரவேற்றாா். துணைப் பேராசிரியா் டி. ஹூட்ஸன் ஆலிவா் நன்றி கூறினாா்.