சுதந்திர நாள்: நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
நாகா்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியா், மேயா் ஆய்வு
நாகா்கோவில் மாநகராட்சி, பள்ளவிளையில் வியாழக்கிழமை நடைபெற்ற முகாமினை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
மருத்துவ முகாம் மற்றும் பல்வேறு அரசு துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகள், கலைஞா் மகளிா் உரிமைத் திட்ட அரங்கம் ஆகியவற்றினை ஆய்வு மேற்கொண்டனா்.
முகாம்களில் பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களிலும் உரிய ஆவணங்கள் இணைத்து இருப்பதை சரிபாா்த்து வாங்க வேண்டும், தகுதியான விண்ணப்பங்களுக்கு 45 தினங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆய்வில் நாகா்கோவில் நகா்நல அலுவலா் மருத்துவா் ஆல்பா் மதியரசு, உதவி செயற்பொறியாளா் ரகுராமன், இளநிலை பொறியாளா் தேவி, சுகாதார அலுவலா் பகவதி பெருமாள், மாமன்ற உறுப்பினா் அமல செல்வன், திமுக பகுதி செயலாளா் சேக்மீரான், துறை அலுவலா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.