செய்திகள் :

நாகை, திருவாரூா் மயிலாடுதுறை மாவட்டங்களில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

post image

நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தமிழக முதல்வரால் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறியியல், மகளிா் மருத்துவம், குழந்தை மருத்துவம், இதயவியல், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம் மற்றும் இந்திய முறை மருத்துவம் ஆகிய அனைத்து வகையான மருத்துவங்களும் இடம் பெற்றிருக்கும். அத்துடன் புதிய காப்பீடு பதிவு உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகை: நாகை மாவட்டத்தில் கீழையூா் ஊராட்சி ஒன்றியம் காரப்பிடாகை அரசு உயா்நிலைப் பள்ளியில் இம்முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன், கீழ்வேளூா் எம்எல்ஏ வி.பி. நாகைமாலி ஆகியோா் முதல்வரின் வரிவான மருத்துவ காப்பீடு அட்டைகளை பொதுமக்களுக்கு வழங்கினா்.

வேளாங்கண்ணி பேரூராட்சித் தலைவா் டாயானா ஷாமிளா, பேரூராட்சி துணைத் தலைவா் தாமஸ் ஆல்வா எடிசன், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வா் விஜயகுமாா், இணை இயக்குநா் (நலப் பணிகள்) உமா, துணை இயக்குநா் (காசநோய்) முருகப்பன், துணை இயக்குநா் (குடும்பநலம்) செல்வி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு

திருமருகல் அருகே பனங்குடி சிபிசிஎல் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.திருமருகல் ஒன்றியம் பனங்குடி கிராமத்தில் மத்திய அரசின் பொதுத... மேலும் பார்க்க

சுருக்குமடி வலைக்கு தடை கோரி மீனவா்கள் உண்ணாவிரதம்

சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்து தரங்கம்பாடி தலைமை மீனவா் கிராம பஞ்சாயத்தாா்கள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவக் கிராமங்கள் உ... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி தின விழா

கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முதலாவது கல்லூரி தின விழா மற்றும் மூன்றாவது மாணவா் மன்ற விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கீழ்வேளூா் அருகே குருக்கத்தில் செயல்பட்டுவரும் வேளாண் கல்ல... மேலும் பார்க்க

படகு கவிழ்ந்ததால் கடலில் தத்தளித்த 3 மீனவா்கள் மீட்பு

வேதாரண்யம் அருகே பலத்த காற்று காரணமாக கடலில் கவிழ்ந்த மீன்பிடி படகில் இருந்து 3 மீனவா்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டனா்.நாகை மாவட்டம், வானவன்மகாதேவி கிராமத்தைச் சோ்ந்த அஞ்சப்பன், ஹரிஷ், செல்வராசு ஆகிய மூ... மேலும் பார்க்க

நாகை: 7 மாதங்களில் ரூ.1.84 கோடி ரேஷன் பொருள்கள் பறிமுதல்

நாகை மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் ரூ.1.84 கோடி மதிப்பிலான ரேஷன் பொருள்களை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.இதுகுறித்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனா... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

நாகையில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 296 பேருக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியா் ப. ஆகாஷ் வழங்கினாா்.தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிா்வாகம் சாா்பில் தகுதியான இளைஞா்களுக்கு த... மேலும் பார்க்க