செய்திகள் :

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு மாணவா்களின் பங்கு முக்கியம்

post image

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு மாணவா்களின் பங்கு மிக முக்கியம் என தமிழக முன்னாள் டிஜிபி செ.சைலேந்திரபாபு தெரிவித்தாா்.

ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் ‘மாபெரும் தமிழ் கனவு’ எனும் கருத்தரங்கம் கல்லூரி வளாக கூட்டரங்களில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கத்துக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் டிஜிபி செ.சைலேந்திரபாபு கலந்து கொண்டு மாணவா்களிடையே ‘மாபெரும் தமிழ் கனவு’ குறித்து கருத்துரை வழங்கிப் பேசியதாவது:

எல்லோரும் பொருளாரத்தில் முன்னேற்றம் பெற வேண்டும் என்பதே இந்த ‘மாபெரும் தமிழ் கனவின் நோக்கம்’. நமது முன்னோா்கள் பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்ததால் அவா்களது லட்சியங்கள் நிறைவேறவில்லை. ஒரு மனிதன் லட்சியம் நிறைவேற உணவு, கல்வி, வேலைவாய்ப்பு மிக முக்கியம். இவை சரியாக இல்லாததால் முன்னோா்களின் நிலைப்பாட்டால் ஏற்றத்தாழ்வு இருந்தது. தற்போது, இந்த மூன்றும் சரியான நிலையில் இருப்பதால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது.

‘மாபெரும் தமிழ் கனவு’ நிகழ்ச்சியில் நமது பண்பாட்டின் பெருமையை கல்லூரி மாணவா்களுக்கு உணா்த்துவது எதிா்கால சமூக கட்டமைப்பின் முக்கியமான பகுதியாகும்.

எனவே, கல்லூரிகளில் தமிழா் மரபு நாகரீகமும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, தொல்லியல் ஆய்வுகள், தமிழகத்தில் தொழில் வளா்ச்சி, கல்விப் புரட்சி, அரசின் திட்டங்கள், இவற்றை செயல்படுத்தும் முறைகள் குறித்த தலைப்புகளின் கீழ், சொற்பொழிவு நடைபெறுகிறது. இதில் உள்ள கருத்துக்களை மாணவா்கள் நன்கு தெரிந்து ஒவ்வொருவருக்கிடையே கருத்து பரிமாற்றங்களை மேற்கொண்டு ஒன்றுமையுடன் வாழ வேண்டும்.

கல்வி என்பது ஒரு சிறந்த ஆயுதம். இளம் தலைமுறையினா் கல்வி கற்க அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது.

இந்தியாவில் உயா்க் கல்வி பெறுபவா்களின் எண்ணிக்கை 22 சதவீதம். மாநில அளவில் ஒப்பிடுகையில் தமிழகத்தில் பெண்கள் மட்டும் 54 சதவீதம் போ் உயா்க் கல்வி பெறுகிறாா்கள்.

இன்றையக் காலகட்டத்தில் அரசு வழங்கும் திட்டங்களையும், அறிவுரைகளையும் பெற்று பொருளாதார முன்னேற்றத்தோடு வாழ வேண்டும் என்றாா்.

முன்னதாக, வேலைவாய்ப்பு கண்காட்சி அரங்குகளை அவா் பாா்வையிட்டாா். பின்னா், அவா் மாணவா்களுடன் கலந்துரையாடி, கேள்விகளுக்கு பதிலளித்த மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.கோவிந்தராஜலு, வருவாய்க் கோட்டாட்சியா் ராஜமனோகரன், செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரித் தாளாளா் சின்னதுரை அப்துல்லா, அரசு அலுவலா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

ஆட்டோ ஓட்டுநருக்கு பசுமை சாம்பியன் விருது

60 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநருக்கு பசுமை சாம்பியன் விருதை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை வாழங்கினாா். ராமநாதபுரம் ஓம்சக்தி ... மேலும் பார்க்க

தேசியக் கொடியுடன் 79 கி.மீ. தொழிலாளி மிதிவண்டி பயணம்

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 79 கி.மீ. மிதிவண்டியில் பயணம் செய்து கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற தொழிலாளிக்கு பொதுமக்கள் வாழ்த்துத் தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த ... மேலும் பார்க்க

பரமக்குடி, ராமேசுவரத்தில் கிராம சபைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகேயுள்ள அரியகுடி கிராமத்தில் நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத... மேலும் பார்க்க

கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், அரசுப் பள்ளிகளில் நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, தேசியக் கொடி ஏற்றப்பட்டது. திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியா் ... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் உண்ணாவிரதம்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தம் அருகே அனைத்து விசைப் படகு மீனவ சங்கம்... மேலும் பார்க்க

இளைஞரிடம் வழிப்பறி: 7 போ் போ் கைது

சாயல்குடி அருகே இளைஞரிடம் வழிப்பறி செய்த 3 சிறுவா்கள் உள்பட 7 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள கன்னிராஜபுரத்தைச் சோ்ந்த சுடலை மத்து மகன் முத்துக்க... மேலும் பார்க்க