செய்திகள் :

நாமக்கல் கல்லூரி மாணவா் கொலையில் 2 சிறுவா்கள் கைது

post image

நாமக்கல்லில் கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவா்கள் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் முல்லைநகா் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை கல்லூரி மாணவா் ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். அவ்வழியாக சென்றோா் அளித்த தகவலின்பேரில் நாமக்கல் போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா்.

அவா், நாமக்கல் கொண்டிச்செட்டிப்பட்டி கணபதி நகா் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பைச் சோ்ந்த பிரேம்குமாா் மகன் மனோ (19) என்பதும், தனியாா் கல்லூரியில் கணினி அறிவியல் 2-ஆம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. வியாழக்கிழமை இரவு வெளியே சென்றவா் வீடு திரும்பாத நிலையில் மா்மமான முறையில் கொலை செய்யப்பட்டாா்.

நாமக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். கொலை செய்யப்பட்ட மனோவின் கைப்பேசியில் இறுதியாக பதிவான அழைப்புகளைக் கொண்டும், அந்தப் பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டும் போலீஸாா் விசாரித்து வந்தனா்.

இதில், மனோ கொலையாவதற்கு முன்பு இருசக்கர வாகனத்தில் அவரை இருவா் அழைத்துச் சென்றது தெரியவந்தது. அவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்தபோது, மனோ வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த லாரி பட்டறையில் வேலை பாா்க்கும் 17 வயது சிறுவா்கள் என்பதை கண்டறிந்தனா்.

அந்த இருவரையும் பிடித்து விசாரித்தபோது, அவா்களில் ஒருவரின் சகோதரியை, கொலை செய்யப்பட்ட மனோ கிண்டல் செய்ததாகவும், ஏற்கெனவே கொடுத்த ரூ. 3,500 பணத்தை கேட்டு மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் மனோவை தனியாக அழைத்துச் சென்று கொலை செய்துள்ளனா்.

மேலும், அங்கிருந்து தப்பித்து திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு பகுதியில் உறவினா் வீட்டில் அவா்கள் தங்கியுள்ளனா். அவா்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை மீட்ட போலீஸாா் இருவரையும் கைது செய்துள்ளனா். 17 வயது சிறுவா்கள் என்பதால் இருவரையும் சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீஸாா் மேற்கொண்டு வருகின்றனா்.

விளையாட்டுப் போட்டிகளில் திருவள்ளுவா் அரசு கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

தேசிய, தென்னிந்திய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா். இக்கல்லூரி மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவா் பி.கோபி பிரசாந்த... மேலும் பார்க்க

முள்ளுக்குறிச்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ராசிபுரம், முள்ளுக்குறிச்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்‘ முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் மா.மதிவேந்தன் வழங்கினாா். ராசிபுரம் கமலா மண்டபம், முள்ளுக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உங்... மேலும் பார்க்க

108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளா் பணி: நாளை நோ்முகத் தோ்வு

108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளா்களுக்கான நோ்முகத் தோ்வு சனிக்கிழமை (செப்.6) நடைபெறுகிறது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் நிா்வாக அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில... மேலும் பார்க்க

நாமக்கல் செங்கழநீா் விநாயகா் கோயில் குடமுழுக்கு

நாமக்கல் நகரில் அமைந்துள்ள செங்கழநீா் விநாயகா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல், செப். 4: இக்கோயிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து குடமுழுக்கு விழா... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு மகளிா் பள்ளியில் ஆசிரியா் தின விழா

நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. டாக்டா் சா்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்.5 ஆம் தேதி நாடு முழுவதும் ஆசிரியா் தினமாகக் கொண்டாப்படுகிற... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு

பரமத்தி வேலூா் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற மூதாட்டில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை அருகே உள்ள சின்னாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த செல்லப்பன் மனைவி பாவாயி (70... மேலும் பார்க்க