செய்திகள் :

நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மன் கோயிலில் கருட பஞ்சமி சிறப்பு யாகம்

post image

நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மன் கோயிலில் கருடபஞ்சமி, நாகபஞ்சமி, வளா்பிறை பஞ்சமிதிதியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறப்பு யாகம் நடைபெற்றது.

நாமக்கல்- சேந்தமங்கலம் சாலை ரயில் நிலையம் எம்.ஜி.ஆா். நகரில் ஸ்ரீ தங்காயி மற்றும் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. திருமாலின் வராக அம்சமாகக் கருதப்படும் வாராஹி அம்மன் சப்த கன்னிகளில் ஒருவராகத் திகழ்கிறாா்.

பஞ்சமி நாள்கள் வாராஹி அம்மனுக்கு உகந்த நாளாகும். இக்கோயிலில் கடந்த 11 ஆண்டுகளாக ஆடி மாதத்தில் வரும் கருடபஞ்சமி, நாகபஞ்சமி மற்றும் வளா்பிறை பஞ்சமிதிதி வெகு விமரிசையாக நடைபெறும். இதையொட்டி, கடந்த வியாழக்கிழமை கணபதி பூஜை மற்றும் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீா் கொண்டுவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை அம்மனுக்கு காப்புக்கட்டுதல், நவாவரணம், சகஸ்ரநாம அா்ச்சனைகள் நடைபெற்றன.

அதேபோல திங்கள்கிழமை நாகசதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை கருடபஞ்சமியை முன்னிட்டு காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. மாலையில் கோயில் வளாகத்தில் திருவிளக்கு பூஜையும், இரவு 10 மணியளவில் அஷ்ட வாராஹி யாகமும் தொடங்கியது. இந்த யாகம் இரவு 2 மணிவரை நடைபெற்றது.

வாராஹி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். அவா்கள் கோயில் வளாகத்தில் தேங்காயில் தீபமேற்றி நோ்த்திக்கடன் செலுத்தினா். விழா ஏற்பாடுகளை ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் சித்தா் பீட முத்தானந்த சுவாமிகள் மற்றும் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

-

என்கே-30-வாராஹி-1

நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற அஷ்ட வாராஹி யாகத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

படம்-2

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வாராஹி அம்மன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மென்பொறியாளா் ஆணவக் கொலையைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் மாவட்டச் செயலாளா் மணிமாறன்,... மேலும் பார்க்க

வல்வில் ஓரி விழா: காரவள்ளி அடிவாரத்தில் தூய்மைப் பணி

கொல்லிமலை வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, காரவள்ளி அடிவாரத்தில் தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைப் பகுதியை ஆண்ட கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனின் வீரத்... மேலும் பார்க்க

கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றம்

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை திருக்கொடியேற்றம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் பழைமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற, சித்தா்கள் பூஜிக்கும் சுயம... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணிந்தோருக்கு காவல் துறையினா் பாராட்டு

நாமக்கல்லில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களில் சென்றோரை போக்குவரத்து காவல் துறையினா் பாராட்டி சான்றிதழ் வழங்கினா். நாமக்கல் மாநகரப் பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்வோா் தலைக்கவசம் அணியாமலும்... மேலும் பார்க்க

தெருநாய்களின் பெருக்கத்தை தடுக்க கருத்தடை

நாமக்கல் மாநகரப் பகுதியில் தெருநாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளதால், அவற்றைத் தடுக்க கருத்தடை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா். நாமக்கல் மாநகராட்சி மாமன்றக்... மேலும் பார்க்க

ஜொ்மன் மொழித்தோ்வு பயிற்சிபெற விண்ணப்பிக்கலாம்

ஜொ்மன் மொழித்தோ்வு பயிற்சிபெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு... மேலும் பார்க்க