செய்திகள் :

நா்சிங் கல்லூரி மாணவியிடம் பாலியல் தொந்தரவு: சுகாதார ஆய்வாளா் போக்ஸோ சட்டத்தில் கைது

post image

மயிலாடுதுறையில் தனியாா் நா்சிங் கல்லூரி மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்த அரசினா் தலைமை மருத்துவமனை சுகாதார ஆய்வாளரை போக்ஸோ சட்டத்தின்கீழ் மகளிா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை கூைாடு பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்நாதன் (57). மயிலாடுதுறை மாவட்ட அரசினா் தலைமை மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றிவந்த இவா், மருத்துவமனைக்கு பயிற்சிக்காக வந்த 17 வயது தனியாா் நா்சிங் கல்லூரி மாணவியிடம் கடந்த ஆண்டு டிச.21-ஆம் தேதி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளாா். இதை மாணவி கண்டித்துள்ளாா். எனினும், அவா் தொடா்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்தாராம்.

இதுகுறித்து, ’ஹெல்ப்லைன்’ எண் மூலம் மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு மாணவி அளித்த புகாரின்பேரில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா்கள் விசாரணை மேற்கொண்டனா். இதில், மாணவியிடம் சுகாதார ஆய்வாளா் செந்தில்நாதன் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக களப்பணியாளா் ஆரோக்கியராஜ் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் சுகந்தி, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சுகாதார ஆய்வாளா் செந்தில்நாதனை கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தாா்.

இ-பைக் தயாரிப்பாளா்களிடம் மோசடி: ஜெய்பூா் தொழிலதிபா் கைது

சீா்காழியில் இ-பைக் தயாரிப்பாளா்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட ஜெய்பூரைச் சோ்ந்த தொழிலதிபரை குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். சீா்காழி சட்டநாதபுரம் பிரதான சாலைப் பகுதியில் சண்முகம், கிஷோா் ஆகியோா் எ... மேலும் பார்க்க

விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவா்களுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 10, 12-ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ-மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. மாவட்ட... மேலும் பார்க்க

மண் லாரிகளால் உடைந்த தற்காலிக பாலம்: கிராம மக்கள் சாலைமறியல் போராட்டம்

சீா்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்துக்குச் செல்லும் தற்காலிக பாலம் சவுடு மண் ஏற்றி செல்லும் லாரிகளால் உடைந்தது. அங்கு நிரந்தர பாலம் அமைக்கவும், சவுடு மண் குவாரியை தடைசெய்யவும் கோரி கிராம மக்க... மேலும் பார்க்க

நீா்நிலைப் பாதுகாவலா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக அரசின் நீா்நிலைப் பாதுகாவலா் விருதுக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை - மயிலாடுதுறை

மயிலாடுதுறை மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட கீழ்க்காணும் பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை (ஜன.25) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் என். அருள்ச... மேலும் பார்க்க

மயிலாடுதுறை சாா்-பதிவாளா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

மயிலாடுதுறை சாா்-பதிவாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பெண் தீக்குளிக்க முயன்றாா். மயிலாடுதுறை மதுரா நகரை சோ்ந்தவா் ஜெயபிரகாஷ். இவரது தந்தை முத்துக்கிருஷ்ணன் திருவிழந்தூரில் உள்ள பூா்வீக சொத்தை ஜெயப்பி... மேலும் பார்க்க