செய்திகள் :

நீலகிரி உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை!

post image

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,

ஆக. 29 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை..

ஆக. 29, 30ல் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

சென்னையை பொருத்தவரை..

இன்று (29-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கு..

ஆக. 29, 30ல் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

The Meteorological Department has stated that heavy rain is likely to occur in 4 districts of Tamil Nadu today.

அதிமுக அமைப்புச் செயலராக முன்னாள் அமைச்சா் நியமனம்

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் நாஞ்சில் எம்.வின்சென்ட் அதிமுக மாநில அமைப்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தி... மேலும் பார்க்க

இன்று விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் காட்பாடியுடன் நிறுத்தம்

சென்னை: விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (செப். 2) காட்பாடியுடன் நிறுத்தப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: செப். 2, 3, 5, 7, 8, 9 ஆகிய... மேலும் பார்க்க

தமிழகத்தில் மூளை தின்னும் அமீபா பரவல் இல்லை: மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் மூளை தின்னும் அமீபா பரவல் இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.கேரளத்தில் இந்தவகை அமீபா பரவலால் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர் இவ்வாறு தெரிவித... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து மேலும் அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (செப். 1) மாலை நிலவரப்படி வினாடிக்கு 36,985 கனஅடியாக அதிகரித்துள்ளது.அணையின் நீர்மட்டம் 119.48 அடியாக உயர்ந்தது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற... மேலும் பார்க்க

மூளையைத் தின்னும் அமீபா: தமிழக சுகாதாரத்துறை முக்கிய உத்தரவு!

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து தமிழகத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு தமிழக பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. நன்னீர... மேலும் பார்க்க

அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பக... மேலும் பார்க்க