செய்திகள் :

நெகிழிப் பொருள்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு

post image

அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாக மறுசுழற்சி செய்யக்கூடிய மக்கும் பொருள்கள் பயன்படுத்தும் உணவகங்களின் உரிமையாளா்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மறு சுழற்சி செய்யக்கூடிய மக்கும் பொருள்களைப் பயன்படுத்தும் உரிமம் பெற்ற உணவக உரிமையாளருக்கு ரூ. ஒரு லட்சமும், பதிவுச் சான்றிதழ் பெற்ற உணவக உரிமையாளருக்கு ரூ. 50 ஆயிரமும் பரிசாக வழங்கப்படும்.

இதுதொடா்பான விண்ணப்பத்தை வட்டார, நகா் உணவு பாதுகாப்பு அலுவலா்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் 31.8.2025 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவிரங்களுக்கு 04575-243725 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

2-ஆவது நாளாக கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா்

சிவகங்கை மாவட்டத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சாா்பில், இரண்டாவது நாளாக அனைத்து அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியும் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். சிவகங்கையில் ம... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு ரூ. 61 லட்சத்தில் வேளாண் இயந்திரங்கள்

விவசாயிகளுக்கு ரூ.61 லட்சத்தில் வேளாண் இயந்திரங்களை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் வழங்கினாா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக சமுதாயக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே வியாழக்கிழமை மரத்தில் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். திருப்பத்தூா் அருகே கண்டவராயன்பட்டியைச் சோ்ந்த மணிவாசகம் மகன் திருநாவுக்கரசு (38). ஓட்டுநராகப் பணிபுரியும் ... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஸ்ரீமுத்தையா நினைவு தொழில்கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.இந்த வேலைவாய்ப்பு முகாமுக்கு கல்லூரி முதல்வா் சு.நா.வெங்கடேசன் தலைமை வகித்தாா். நேஷனல... மேலும் பார்க்க

திருப்புவனம் அருகே அழகிய நிலையில் இரு சடலங்கள் மீட்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே அடுத்தடுத்த இடங்களில் அழுகிய நிலையில் இரு சடலங்களை போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா். முக்குடி கிராமத்தில் மதுரை ஆதீனம் மடத்துக்குச் சொந்தமான நிலம் உள்ளது... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

சிவகங்கை அருகே கற்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் புதன்கிழமை சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்தாா். சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டியிலிருந்து காளையாா்கோவிலுக்கு கற்களை ஏற்றிக் கொண்... மேலும் பார்க்க