கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!
நெருப்புடன் விளையாடுகிறார் புதின்! - அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் நெருப்புடன் விளையாடுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் இறுதி செய்வதற்கான முயற்சிகளைத் தடுத்து நிறுத்தியதற்காக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிபர் டிரம்ப் ட்ரூத் சோசியல் என்ற சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “நான் மட்டும் இல்லையென்றால், ரஷியாவிற்கு ஏற்கெனவே நிறைய மோசமான சம்பவங்கள் நடந்திருக்கும் என்பதை புதின் உணரவில்லை. நான் சொல்வது மிகவும் மோசமானது. அவர் நெருப்புடன் விளையாடுகிறார்!” எனப் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து ரஷியா - உக்ரைன் இடையே மிகவும் மோசமான அளவில் போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபராக தான் பதவியேற்றதும் இரு நாடுக்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவருவேன் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.
அதன்படி, இரு நாட்டு தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அதில் முடிவு எட்டப்படவில்லை. ஆனால், டிரம்ப்பின் தீவிர அமைதி முயற்சிக்கிடையிலும் உக்ரைன் மீது ரஷியா தொடா்ந்து தாக்குதல் நடத்திவருகிறது.
இருந்தாலும் இதுதொடா்பாக அதிபர் புதினை விமா்சிப்பதை டிரம்ப் பெரும்பாலும் தவிா்த்துவந்தார். இந்தச் சூழலில், கீவ் நகரைக் குறிவைத்து ரஷியா இதுவரை இல்லாத ட்ரோன் தாக்குதலை சனிக்கிழமை இரவு நடத்தியது. இதில் 13 போ் பலியாகினர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, அதிபர் புதின் மீது அதிருப்தி தெரிவித்திருந்த டிரம்ப், மீண்டும் கடுமையாக சாடியுள்ளார்.
இதையும் படிக்க: ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானிடம் இந்தியா சொன்னது எப்போது? முரண்பட்ட தகவல்கள்!