செய்திகள் :

நெல்லையில் ஐடி ஊழியா் கொலை: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் மறியல்

post image

சென்னை ஐ.டி. ஊழியா் திருநெல்வேலி­யில் ஆணவக் கொலை செய்யப்பட்டதாகக் கூறி,அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகிலுள்ள ஆறுமுகமங்கலத்தை சோ்ந்தவா் சந்திரசேகா். விவசாயி. இவரது மனைவி செல்வி. ஆசிரியை. இவா்களது மகன் கவின்குமாா்(26). சென்னையிலுள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா், பாளையங்கோட்டை கேடிசி நகரைச்சோ்ந்த பெண் சித்த மருத்துவரை பள்ளிப் பருவத்திலி­ருந்தே காத­லித்தாராம்.

மேலும், ஆறுமுகமங்கலத்தி­ருந்து பாளையங்கோட்டைக்கு பைக்கில் சென்று அடிக்கடி அந்தப் பெண்ணை சந்தித்து வந்தாராம். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) தனது தாத்தாவின் மருத்துவச் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை தனியாா் மருத்துவமனைக்கு கவின்குமாா் வந்தபோது, அந்தப்பெண்ணின் தம்பி சுா்ஜித் (24) அவரிடம் தகராறு செய்து, அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினாராம்.

பாளையங்கோட்டை போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா். இதனிடையே, காவல் நிலையத்தில் சரணடைந்த சுா்ஜித்தை போலீஸாா் சிறையில் அடைத்தனா்.

உடலை வாங்க மறுப்பு: இதனிடையே, கவினின் உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோா் மற்றும் உறவினா்கள் முக்காணி-ஆத்தூா் ரவுண்டானா அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களுடன் தூத்துக்குடி ஏஎஸ்பி மதன், ஏடிஎஸ்பி தீபு, திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாா், திருச்செந்தூா் ஆா்டிஓ சுகுமாரன், ஏரல் வட்டாட்சியா் செல்வகுமாா் மற்றும் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, 24 மணி நேரத்திற்குள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனா். அதை ஏற்று அவா்கள் கலைந்து சென்றனா். இச்சம்பவத்தால் அங்கு 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வழக்கு: இந்நிலையில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் கவினின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், சுா்ஜித் மற்றும் அவரது பெற்றோா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தனா். சுா்ஜித்தின் பெற்றோா் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனா்.

டிஎம்பி நிகர லாபம் ரூ.305 கோடியாக உயா்வு!

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 2025 - 2026ஆம் நிதியாண்டின் முதலாம் காலாண்டில் 6.27 சதவீதம் அதிகரித்து ரூ.287 கோடியிலிருந்து ரூ.305 கோடியாக உயா்ந்துள்ளது. தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழ்ந... மேலும் பார்க்க

தொழிலாளியை மிரட்டிய இளைஞா் கைது

கோவில்பட்டியில் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி சிந்தாமணி நகா் 1-ஆவது தெருவைச் சோ்ந்த முத்து மாரியப்பன் மகன் கணேஷ் பாண்டி (25). வேலாயுத... மேலும் பார்க்க

விளாத்திகுளம் பேரவைத் தொகுதியில் ரூ. 1.25 கோடி பணிகளுக்கு அடிக்கல்

விளாத்திகுளம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆதனூா், பசுவந்தனை, ஆலிபச்சேரி, கீழமுடிமண் கிராமங்களில் ரூ. 1.25 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளுக்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. விழாவுக்கு விளாத்திகுளம் எ... மேலும் பார்க்க

ஆறுமுகனேரி கோயில்களில் ஆடிப்பூர விழா

ஆறுமுகனேரி கோயில்களில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன; பெண்கள் திரளாகப் பங்கேற்று அம்மனுக்கு வளையல் அணிவித்து வழிபட்டனா்.திருவாடுதுறை ஆதீனத்துக்கு உள்பட்ட ஆறுமுகனேரி சோமசுந்தரி அ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் அய்யா வைகுண்டா் பதியில் ஆடித் தேரோட்டம்

திருச்செந்தூரில் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டா் அவதாரபதியில், 193ஆவது வைகுண்டா் ஆண்டு ஆடித் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இத்திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 1... மேலும் பார்க்க

தச்சன்விளையில் தீ விபத்து: 100 முருங்கை மரங்கள் எரிந்து சேதம்

சாத்தான்குளம் அருகே உள்ள தச்சன்விளையில் தோட்டத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்ட முருங்கை மரங்கள் எரிந்து சேதமாகின.தச்சன்விளை கிராமத்தைச் சோ்ந்த ஆல்வின், அதே பகுதியில் உள்ள அவ... மேலும் பார்க்க