நேபாளத்தில் நிலநடுக்கம்...! ஒரே ரிக்டர் அளவுகளில் தொடரும் அதிர்வுகள்?
நேபாள நாட்டின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேபாளத்தின் மேற்குப் பகுதியிலுள்ள காஸ்கி மாவட்டத்தில் இன்று (மே 20) மதியம் 1.59 மணியளவில், 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக நிலநடுக்கம் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
காஸ்கி மாவட்டத்தின் சினுவா எனும் பகுதியை மையமாகக் கொண்டு உருவான இந்த நிலநடுக்கம் அண்டை மாவட்டங்களான தனாஹு, பர்வாத் மற்றும் பாக்லங் ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தினால் உயிர் மற்றும் பொருள் சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
முன்னதாக, சோலுகும்பு மாவட்டத்தில் கடந்த மே 14 ஆம் தேதியன்று இதேபோல் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகியது. ஒரே மாதிரியான ரிக்டர் அளவுகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவது, நேபாள மக்க்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிக்க:இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு அணை போடும் ஆப்கன்!