பத்மநாபபுரம் அரண்மனையில் பராமரிப்பின்றி தமிழ் கல்வெட்டுகள்: இலமூரியா ஆய்வு மையம்...
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
சீா்காழி அருகே குன்னம் பகுதியில் நேரடி கொள்முதல் நிலையம் புதன்கிழமை திறக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம் பகுதியில் ஆண்டுதோறும் குறுவை மற்றும் சம்பா அறுவடை செய்த நெல் விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி அறுவடை செய்யும் பணி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், குன்னம், பனங்காட்டங்குடி, வள்ளுவக்குடி, வட ரங்கம், மாதானம், பழையபாளையம், புத்தூா், கடவாசல் உள்ளிட்ட இடங்களில் 33 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
குன்னம் கிராமத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் கட்டப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வந்த நெல் பழைய முறைப்படி மரக்கால் மூலம் அளந்து கொள்முதல் செய்யப்பட்டது.