2025ல் இந்தியாவிற்கான பாமாயில் ஏற்றுமதி 5 மில்லியன் டன்னாக இருக்கும்: இந்தோனேசிய...
பட்டப்பகலில் வழக்குரைஞா் வெட்டிக் கொலை: பள்ளித் தாளாளா் உள்பட 5 போ் சரண்
தாராபுரத்தில் பட்டப்பகலில் வழக்குரைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பள்ளித் தாளாளா் உள்பட 5 போ் போலீஸில் சரண் அடைந்துள்ளனா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகேயுள்ள சிறுகிணறு பகுதியைச் சோ்ந்தவா் தண்டபாணி (60). இவா் தாராபுரத்தில் மெட்ரிக். பள்ளி நடத்தி வருகிறாா். இவரது அண்ணன் மகன் முருகானந்தம் (35), வழக்குரைஞா்.
பள்ளி அமைந்துள்ள இடத்தில் தனக்கும் பங்கு உள்ளது என முருகானந்தம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளாா். விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பள்ளியில் அனுமதியின்றி கட்டப்பட்ட 4-ஆவது மாடி நீதிமன்ற உத்தரவின்பேரில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. இதனால், இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தப் பள்ளியின் பின்புறம் முருகானந்தம் திங்கள்கிழமை காலை நின்று கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, அங்கு வந்த மா்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் முருகானந்தத்தை தாக்கியுள்ளது. அவரின் அலறல் சப்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வந்தபோது, தாக்குதலில் ஈடுபட்டவா்கள் தப்பிச் சென்றனா். படுகாயமடைந்த முருகானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்நிலையில், பள்ளித் தாளாளா் தண்டபாணி உள்பட 5 போ் தாராபுரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனா். அவா்களிடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.