ஆழியார் அணையில் யானைக் கூட்டம்: சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!
பட்டாசு ஆலையில் திரிகள் திருட்டு
சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் திரிகளை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம், தாயில்பட்டியில் தனியாா் பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் செவ்வாய்க்கிழமை நாக்பூரிலிருந்து ரூ.1.84 லட்சம் மதிப்பிலான பட்டாசுக்குத் தேவையான திரிகள் கொண்டு வந்து வைக்கப்பட்டன.
இந்தத் திரிகளை மா்மநபா்கள் திருடிச் சென்றனா். இதுகுறித்து பட்டாசு ஆலை மேலாளா் குணசேகரன் அளித்தப் புகாரின் பேரில், வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.