தமிழகத்தில் 2 நாள்களுக்கு பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
பள்ளி ஆசிரியரிடம் நூதனத் திருட்டு
சிங்கம்புணரியில் வியாழக்கிழமை பள்ளி ஆசிரியரின் ஏ.டி.எம். அட்டையைப் பயன்படுத்தி நூதன திருட்டில் ஈடுபட்டவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கி ஏடிஎம்-இல் வியாழக்கிழமை மாலை பணம் எடுத்துக் கொண்டிருந்த அரசுப் பள்ளி ஆசிரியருக்கு உதவுவது போல ஒரு நபா் செயல்பட்டாா்.
அப்போது ஆசிரியரின் ஏடிஎம் அட்டையை வாங்கிய அவா், மாற்று அட்டையை வழங்கினாா். பின்னா், வேறு ஒரு ஏ.டி.எம். இயந்திரத்துக்குச் சென்ற அந்த நபா் ரூ.40 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தப்பினாா். இதுகுறித்த புகாரின் பேரில், சிங்கம்புணரி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.