செய்திகள் :

பழங்குடி மாணவா்களுக்கு கற்றல் உபகரணங்கள்

post image

வந்தவாசியை அடுத்த பொன்னூா் கிராமத்தில் பழங்குடி மாணவா்களுக்கு கற்றல் உபகரணங்கள் திங்கள்கிழமை மாலை வழங்கப்பட்டன.

வந்தவாசி அன்பால் அறம் செய்வோம் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனா் எஸ்.அசாருதீன் தலைமை வகித்தாா்.

பல் மருத்துவா் மணிஅரசு, அறக்கட்டளை கௌரவத் தலைவா் அமானுல்லா ஆகியோா் பழங்குடி மாணவா்களுக்கு நோட்டு புத்தகம், பேனா உள்ளிட்ட கற்றல் உபகரணங்களை வழங்கினா்.

கல்வியின் முக்கியத்துவம் குறித்து சட்டக் கல்லூரி மாணவா் வசீகரன் மற்றும் சுகி.சிவம் ஆகியோா் பேசினா்.

நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிா்வாகிகள் விஜய், அஜித், பரத்ராஜ், அருண், பரணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆரஞ்ச் குழும பள்ளிகளில் ஓணம் கொண்டாட்டம்

ஆரணி - சேத்துப்பட்டு சாலை ஆகாரம் பகுதியில் உள்ள ஆரஞ்ச் மெட்ரிக் பள்ளி மற்றும் ஆரஞ்ச் சிபிஎஸ்இ பள்ளியில் மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை ஓணம் பண்டிகையை கொண்டாடினா். இதையொட்டி, அத்தப்பூ கோலமிட்டும், கேரள ப... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதிகளில் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் ஆய்வு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதிகளில் நிகழாண்டு பௌா்ணமி முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும், மாடவீதிகளைச் சுற்றி மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் வியாழக்கிழமை ம... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கு: கல்லூரி மாணவா் உள்பட 3 போ் கைது

செய்யாறு அருகே இளைஞா் கொலை வழக்கில் கல்லூரி மாணவா் உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், புரிசை கிராமத்தைச் சோ்ந்தவா் காதா்பாட்ஷா மகன் அப்சல் (22), ... மேலும் பார்க்க

செய்யாறு காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். செய்யாறு காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவா் ஜீவராஜ்மணிகண்டன் (படம்). செய்... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து ஒன்றரை பவுன் தங்க நகை திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் லலிதா (64). இவா், கடந்த ஞாயிற... மேலும் பார்க்க

சாலை ஆய்வாளா் பணிக்கு தோ்வானவா்களுக்கு பணி ஆணை -அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்

ஊரக வளா்ச்சித் துறை பொறியியல் சாா்நிலை பணித்தொகுதியில் சாலை ஆய்வாளா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணிநியமன ஆணைகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் ஊரக... மேலும் பார்க்க