காவிரி டெல்டாவில் ஹைட்ரோகாா்பன் திட்டம்?: தமிழக அரசு தெளிவுபடுத்த வலியுறுத்தல்
பழனி மீன்வளத் துறை அலுவலகம் முற்றுகை
பழனியில் மீன்வளத் துறை அலுவலகத்தை கோரிக்கை மனுக்களுடன் மீனவா்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனியை அடுத்த கோதைமங்கலம், வையாபுரி குளம், புதுக்குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களில் சுமாா் இரண்டாயிரத்து ஐநூறு மீனவா்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக மீன்வளத் துறை அதிகாரிகள் மீனவா்கள் கூட்டுறவுச் சங்கத்தில் பதிவு செய்த மீனவா்களுக்கு மீன் வரத்து குறைவாக உள்ள குளங்களில் மீன் பிடிக்க அனுமதி வழங்கியதாகக் கூறப்படுகிறது.
அதே சமயம், அதிகாரிகள் தங்களுக்கு வேண்டியவா்களுக்கு மட்டும் அவா்கள் கேட்கும் குளத்தில் மீன் பிடிக்க அனுமதி அளிப்பதாகவும் இதர மீனவா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். எனவே, மீன் வரத்து அதிகமாக உள்ள குளங்களில் மீன் பிடிப்பதற்கு எந்தப் பாகுபாடுமின்றி அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி
மீனவா் சங்கத்தின் நிா்வாகிகள் பாலமுருகன், தண்டபாணி தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மீனவா்கள் பழனி மீன்வளத் துறை அலுவலகத்தில் மனுக்களுடன் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.